
Google கடந்த 16 ம் திகதி உத்தியோகபூர்வமாக சாக்கடல் பகுதியில் Streetview காட்சிகளை இணைத்தது. இஸ்ரேல் பகுதியில் உள்ள பல பகுதிகள் Street view இல் காண காண கூடியதாக உள்ளது. சாக்கடல் அல்லது இறந்த கடல் (Dead Sea) என்னும் நீர்நிலையானது மேற்குக் கரை, இசுரேல், யோர்தான் ஆகியவற்றின் எல்லையில், பெரும்பிளவுப் பள்ளத்தாக்கின் யோர்தானியப் பகுதியில் அமைந்துள்ளது. இக் கடலில் உயிரினங்கள் வாழ முடியாமையினாலேயே இது சாக்கடல் அல்லது இறந்தகடல் என அழைக்கப்படுகிறது.