Home » » Voice Recognition-வார்த்தைகளால் கணணியை ஆளலாம் வாங்க.!


பேச்சுணரி (Voice Recognitionஎன்பது பேச்சை கணினிக்கு புரியும்படியான உள்ளீடாக மாற்றும்  நுட்பம் ஆகும்.பேசுவதை தட்டச்சு செய்வது, பேச்சால் கணினியை கட்டுப்படுத்துவது, கணினியுடன் ஊடாடுவது என பலதரப்பட்ட பயன்பாடுகள் இதற்கு உண்டு. இத்தொழில்நுட்பம் முதிர்ச்சி அடையும் பொழுது நிகழ்நேர மொழிபெயர்ப்பையும் சாத்தியமாக்கலாம்.
விண்டோஸ் 7 இயங்கு தளத்தில் இப்பயன்பாடு இருப்பதை கூட பலர் அறியவில்லை.அறிந்த பலர் ஒருதடவையேனும் முயற்சிக்க இல்லை விண்டோஸ் 7  வெளிவந்து 4 வருடங்கள் கடந்து விட்டது. என் நண்பர் இவ்வசதியை பற்றி கேட்கும் போதுதான் பலரின் நிலைமை கவலைக்கிடம் என்று புரிகிறது.
இத் தொழிநுட்பம் பிரபலம் அடையாமைக்கு காரணம் என்ன? w7  பெரும்பாலும் அமெரிக்க உச்சரிப்பு முறையை அடிப்படையாக கொண்டு உள்ளது. இம்முறை இந்தியாவில் பயன்படும் உச்சரிப்புக்கு பாரிய அளவில் வேறுபட்டது. 
உதாரணமாக Water என்பதை US முறையில் "வோட்டர்"  ˈwɔːtə(r)  என்று உச்சரிப்பார்கள். ஆனால் இந்தியாவில் "வாட்டர்" என்பார்கள். (யாழ்ப்பாணத்தில் சரியாக உச்சரிக்கிறார்கள்)  இதுவே பிரதான பிரச்சனை. தூய ஆங்கிலேயருக்கு மட்டுமே இவ்வசதி பொருத்தமாக உள்ளது. 
நீண்ட கால பயிற்சி மூலம் நாம் கணணியை வாயால் - மொழியால் கட்டுபடுத்தலாம். நாளடைவில் நாம் இதற்கு பழக்க பட்டு விடுவோம்.

இதை எவ்வாறு பெறுவது என்று பார்ப்போம்.
அதற்கு முதல் இது Windows 7 மற்றும் Windows Vista இயங்கு தளத்தில் மட்டுமே செயற்பட கூடியது. எனினும் அனைத்து இயங்கு தளங்களிலும் இயங்க கூடிய வகையிலும் அத்துடன் அனைத்து வலய மக்களின் மொழி உச்சரிப்பை பெரும்பாலும் புரிந்து கொள்ளும் வகையிலும் சிறப்பு மென்பொருள் உள்ளது. இதை நீங்கள் Torrent இல் பெறலாம். அதை இங்கு பாருங்கள் 

How to Setup Voice Recognition in Windows 7


Set up your microphone

  1. Open Speech Recognition by clicking the Start button Picture of the Start button, clicking Control Panel, clicking Ease of Access, and then clicking Speech Recognition.
  2. Click Set up microphone.
  3. Follow the instructions on the screen.


Open Speech Recognition 


  1. clicking the Start button Picture of the Start button, clicking Control Panel, clicking Ease of Access, and then clicking Speech Recognition.
  2. Click Take Speech Tutorial.
  3. Follow the instructions in the Speech Recognition tutorial.
image

  1.  உங்கள் ஒலி வாங்கியை இயக்கிய பின்பு பயிற்சிகள் ஆரம்பமாகும்.

    Warning:
     இப்பாட நெறி முடிய 30 நிமிடங்கள் கூட ஆகலாம். ஆனால் கணணி உங்களை வழி நடத்துவதால் எந்த கஷ்டமும் இல்லை.
  2. பாட நெறியை கவனமாக கவனயுங்கள். மிக மிக முக்கியமான ஆலோசனைகள் உங்களுக்கு வழங்கப்படும்.
  3. பயிற்சி முடிந்தபிறகு உங்கள் கணனியில் மேல்பகுதியில் இவ்வாறான option தோன்றி இருக்கும். இனி என்ன? கணணியை மொழியால் ஆளுங்கள்.

 





இன்னும் சில தகவல்கள்:
  • உங்களுடன் பணியாற்றுவது மனிதன் அல்ல, கணணி என்ற உணர்வுடன்   செயற்படுங்கள்.
  • நீங்கள் இதனுடன் பணியாற்றும் போது ஏனையோருடன் உரையாடுவது விருப்ப தகாதது. சில வார்த்தைகளை கணணி புரிந்துகொண்ட செயற்பட ஆரம்பிக்கலாம். உதாரணமாக நீங்கள் Microsoft Wordஇல்  பேசுவதை தட்டச்சு செய்து கொண்டு இருப்பபின், உங்கள் உரையாடலை கூட பதிவு செய்யும்.