Home » » கனவு இல்லத்தை கணனியில் உருவாக்குவது எப்படி?



ஒவ்வொருவருக்கும் சொந்த வீட்டில் வாழ ஆசை தான். ஆனால் பணம் இல்லை. காணி இல்லை, ஒவ்வொருவரும் நம் வீடு இப்படி இப்படித் தான் அமைய வேண்டும் என்று கனவு காணுவோம், கனவில் கலர் கலரா வருவது தாளில் கீறும் போது அசிங்க அசிங்கமாக வரும். சித்திரம் கை பழக்கம், செந்தமிழ் நா பழக்கம் என்று சொன்னது சும்மாவா?

 இதை எப்படி கணணி உதவியுடன் முடிக்கலாம் என்று இந்தவார மென்பொருள் பகுதியில்   பார்ப்போம்.




picture
இதற்கு கணணி துறையில் உள்ள யாரை கேட்டாலும்  Autodesk Revit Architecture என்ற மென்பொருளை குறிப்பிடுவார்கள். இதன் விலை 5495 $ ஆகும். சரி   இதை Torrent'இல் பெறலாம் என்றால் தரவிறக்க பல (தமிழ் நாட்டில்) பல   நாட்கள் கூட ஆகலாம். இதன் அளவு 2.6  GB.இதன் பயன்பாடு கூட தொழில் முறையனவர்களுக்கு தான் பொருத்தம்..

========================================================================
இதற்கு மாற்றீடாக எவ்வித தொழிநுட்ப அறிவும் இல்லாதார்கள் கூட கனவு இல்லத்தை அமைக்கும் முகமாக ஒரு திறந்த மூலக்கூற்று மென்பொருள்  உள்ளது. இதில் கட்டில், பாய், தலையனை சுவர் , ஓடு, கூரை, மின்குமிழ் என்ன சகல கூறுகளும் மூல வளங்களாக இதனுடன் இணைக்கப்பட்டு உள்ளது. இதனை தவிர இலவசமாக இணையத்தில் இருந்து கூட தரவிறக்கலாம்.
ஒவ்வொரு அமைப்பையும் சுட்டியால் இழுத்து இணைப்பதன் மூலம்  உங்கள் வீட்டை பிரம்மாண்டமாய் உருவாக்கலாம்.  பின்பு வீட்டிற்கு உள்ளும் நுழைந்து சுற்றிக்காட்டலாம்.

 உதாரண படங்களை கிளிக் செய்து பெருப்பித்து பாருங்கள்.





                             



எந்த ஒரு கணணி அறிவும் இல்லாமல் இம் மென்பொருள் மூலம் பிரம்மாண்டமான வீடுகளை கட்டலாம். இவ் மென்பொருள் இயங்க ஜாவா உங்கள் கணனியில் நிறுவப்பட்டு உள்ளதை உறுதிப்படுத்துங்கள்.

"வீடு கட்டி இருப்பதை விட கட்டிய வீட்டில் இருப்பது மேல்" என்று எண்ணுவோருக்கும் இங்கே பலர் தாங்கள் கட்டிய வீட்டை தரவேற்றி உள்ளனர். நீங்கள் கூட உங்கள் வீட்டை பிறருக்கு காட்சி படுத்தலாம்.

இதன் விபரங்கள் இது.
Name:     Sweet Home 3D 
Product site:  Sweethome3d.com
direct Download link      :download  (30 Mb)
online:    SweetHome3DOnline
Models:            Models

உங்கள் கனவு இல்லம் கட்ட நீங்கள் தயாராகுங்கள்...


சின்ன வீடோ பெரிய வீடோ சொந்த வீடு தான் பெஸ்ட்....
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன