Home » » கைத்தொலைபேசிகளின் பயன்பாடுகளை இலவசமாக தரவிறக்கம் செய்வதற்கு



தகவல் தொழில்நுட்பத்தில் அலைபேசிகளின் பங்கு முக்கியமானது. இப்போது நவீன ஸ்மார்ட்போன்களின் வருகை பலவிதமான சேவைகளை தொலைபேசிகளில் பயன்படுத்தும் படியாக உள்ளது.இணையம், செயலிகள், விளையாட்டுகள் மற்றும் இதர பயன்பாடுகள் என இத்துறையில் மென்பொருளாக்கம் வளர்ந்திருக்கிறது. ஆப்பிள், மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற பெரிய ஜாம்பவான்களும் இத்துறையில் நுழைந்து தங்களுக்கென இத்துறையில் சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.
மாறி வரும் காலகட்டத்தில் சாதாரண போனிலிருந்து நவின ஸ்மார்ட் போன்களையே பலரும் விரும்புகின்றனர். இவைகளில் பயன்படுத்த மென்பொருள்கள், விளையாட்டுகள் போன்றவற்றை எங்கே தரவிறக்குவது?
இவர்களின் இணையதளத்தின் மூலம் கைத்தொலைபேசிக்கு தேவையான மேம்பட்ட மென்பொருள்களை இலவசமாகவும் சில கட்டணமாகவும் பெறமுடியும்.
1. Nokia OVI Store: இது நோக்கியா நிறுவனத்தின் இணையதளமாகும். நோக்கியா போனைப் பயன்படுத்துபவர்கள் இத்தளத்தின் மூலம் கைத்தொலைபேசிக்கு தேவையான எல்லாவற்றையும் பெறமுடியும்.
இதில் தரவிறக்கம் செய்ய நோக்கியா ஸ்டோர் கணக்கொன்றைத் தொடங்க வேண்டும். நீங்கள் நோக்கியா கைத்தொலைபேசியில் இருந்து கூட இத்தளத்தில் நுழைந்து தரவிறக்கம் செய்ய முடியும்.
Nokia OVI Store
2. Android Market: கூகுளின் மென்பொருளான ஆண்ட்ராய்டு போன்களைப் பயன்படுத்துவோர்கள் இத்தளத்தின் மூலம் இலவச மற்றும் கட்டண பயன்பாடுகளைத் தரவிறக்கலாம். இத்தளத்திலும் லட்சக்கணக்கான பயன்பாடுகள் உள்ளன.
பயன்பாட்டு வகைகளின் மூலம் எளிதாக தேர்வு செய்ய முடியும். மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் உள்ள டேப்ளட் பிசி போன்ற இதர கருவிகளுக்கும் தரவிறக்கிக் கொள்ளலாம். கவனிக்க வேண்டிய விடயம் நீங்கள் எந்த வெர்சன் பயன்படுத்துகிறிர்களோ அதற்கேற்ப தரவிறக்க வேண்டும். வெர்சன் மாறுபட்டால் சில பயன்பாடுகள் இயங்காது.
Android Market
3. Microsoft Windows Mobile OS: மைக்ரோசாப்டின் இயங்குதளமான Windows Mobile OS கொண்ட போன்களைப் பயன்படுத்துபவர்கள் மைக்ரோசாப்டின் Mobile Market இணையதளத்திலிருந்து பயன்பாடுகளைத் தரவிறக்கலாம். இதனை PocketPC என்று சொல்கின்றனர்.
ஏனெனில் முழுதும் விண்டொஸ் இருக்கும் கணணியைப் போலவே செயல்படுகிறது. இதில் சில பயன்பாடுகளை நிறுவும் போது கணணியிலிருந்து தான் கைத்தொலைபேசியில் நிறுவ முடியும். சில மென்பொருள்களை கணணியில் நிறுவி கணணி வழியாக அமைப்புகளை மேற்கொள்ளலாம்.
Microsoft Windows Mobile OS
4. Apple Store: ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளான ஐபோன் மற்றும் ஐபொட் பயன்படுத்துவர்கள் ஆப்பிளின் ஸ்டோர் இணையதளத்திலிருந்து பயன்பாடுகளை இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம்.
Apple Store



உங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அழகுபடுத்த

உங்களின் வீடியோ மற்றும் புகைப்படங்களை ஓர் அழகான வீடியோ தொகுப்பாக மாற்றி கொள்ளலாம்.அத்துடன் நீங்கள் அழகாக்கி கொண்ட வீடியோ தொகுப்புக்கு பாடல்களை அல்லது ஒலி வடிவங்களை கொடுக்கவும் முடியும். இத்தகைய வசதிகளை நீங்கள் மென்பொருளின்றி ஓன்லைன் மூலம் செய்ய முடியும்.
இந்த தளத்தில் சென்று நீங்கள் வடிவமைக்க விரும்பும் மாதிரியினை தெரிவு செய்து கொண்டு MAKE A VIDEO என்பதை கிளிக் செய்யவும். இப்போது தோன்றும் புதிய பக்கத்தில் ADD IMAGES AND VIDEO என்பதை கிளிக் செய்து புகைப்படங்களை அல்லது வீடியோ காட்சிகளை UPLOAD செய்யவும்.
மேலும் படங்களை UPLOAD செய்ய ADD MORE என்பதை கிளிக் செய்து படங்களை சேர்க்க முடியும். இதே போன்று ADD SOUND TRACK என்பதை கிளிக் செய்வதன் மூலம் பாடல்களை அல்லது ஒலி வடிவங்களை சேர்க்கலாம்.
பின்னர் SAVE AND PREVIEW என்பதை கிளிக் செய்து நீங்கள் தயாரித்த வீடியோக்களை பார்க்க முடியும். இப்போது EXPORT என்பதை கிளிக் செய்து பின்னர் தோன்றும் பக்கத்தில் FREE VIDEO என்பதை கிளிக் செய்து உங்கள் வீடியோக்களை YOUTUBE, FACEBOOK , TWITTER போன்ற தளங்களிலும் பகிர முடிவதுடன் மின்னஞ்சல் மூலம் நண்பர்களுக்கு அனுப்பலாம்.
இணையதள முகவரி


இணையத்தில் எதையும் மறக்காமல் இருப்பதற்கு

இணைய மறதியால் அவதிப்படகூடாது என்று நினைத்தாலோ அல்லது இணைய நினைவுகள் அனைத்தையும் சேமித்து வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தாலோ பேட்ச் லைப் இணைய சேவையை உபயோகப்படுத்தலாம்.காரணம் இணைய தருணங்கள் அனைத்தையும் பதிவு செய்து கொள்ள இந்த சேவை உதவுகிறது. அதாவது பேஸ்புக், டிவிட்டர் மற்றும் வலைப்பதிவு என இணையத்தில் பல இடங்களில் பல விதமாக நீங்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்களை ஒரே இடத்தில் சேமித்து வைக்க இந்த சேவை வழி செய்கிறது.
இந்த சேவையின் அருமையை உணர அதனை பயன்படுத்தி பார்க்க வேண்டும். ஒரு முறை இந்த சேவையை பயன்படுத்தி பார்த்தீர்கள் என்றால் இது போன்ற சேவை இல்லவே இல்லை என்று மனதார பாராட்டுவீர்கள். இன்னும் சிலர் இது போன்ற சேவையை தான் எதிர்பார்த்திருந்தோம் என்று மகிழ்ச்சி அடைவார்கள்.
அந்த அளவுக்கு மிக அழகாக ஒருவரின் இணைய சுவடுகளை பதிவு செய்து கொள்ள இந்த சேவை உதவுகிறது. இணைய சுவடுகள் என்றால் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைப்பின்னல் சேவை தளங்களில் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்கள்.
இப்போது பெரும்பாலானோருக்கு பேஸ்புக் பக்கம் இருக்கிறது. பலர் டிவிட்டரிலும் குறும்பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் வலைப்பதிவு வைத்திருக்கின்றனர். ஆக கருத்துக்களையோ அனுபவங்களையோ பதிவு செய்வதோ பகிர்ந்து கொள்வதோ இன்று மிகவும் சுலமாகியிருக்கிறது.
ஆனால் பிரச்சனை என்னவென்றால் இவற்றையெல்லாம் தொகுக்கவோ நினைவில் கொள்ளவோ வழியில்லை. உதாரணத்திற்கு பேஸ்புக்கில் சில மாதங்களுக்கு முன் ஒரு தகவலை பகிர்ந்து கொண்டிருப்பீர்கள். அது என்ன என்று இப்போது யோசித்து பார்த்தால் நினைவுக்கு வர மறுக்கும்.
பேஸ்புக்கிலேயே பின்னோக்கி போய் தேடலாம் என்றாலும் அது அத்தனை சுலபமானது அல்ல. ஆனால் பேட்ச் லைப் சேவையை நீங்கள் பயன்படுத்தும் பட்சத்தில் இப்படி தேடுவது கூகுலில் தேடுவதை விடவும் எளிதானது.
ஏன் என்றால் பேஸ்ட் லைப் தளத்தில் உங்கள் பேஸ்புக் பதிவுகள் அனைத்தும் திகதி வாரியாக பதிவாகியிருக்கும். நீங்கள் தேட விரும்பும் நாளுக்கான பக்கத்தை கிளிக் செய்தால் அன்றைய பதிவுகள் முழுவதையுமே பார்க்க முடியும்.
பேஸ்புக்கில் உங்களுக்கு வந்த பின்னூட்டங்கள், புகைப்படங்கள் மற்றும் இணைப்புகள் என எல்லாவற்றையுமே பார்க்கலாம். எதையுமே மறக்க வேண்டியதில்லை. இதே போலவே டிவிட்டரில் செயல்படுபவர்கள் தங்கள் குறும்பதிவுகள் அனைத்தையும் திகதி வாரியாக அணுகலாம்.
பேட்ச் லைப் தளத்தில் நுழைந்ததுமே தோன்றும் பக்கத்தில் இடது பக்கத்தில் நாட்காட்டி இடம் பெற்றிருக்கும். அதில் மாதத்தையும் திகதியையும் தேர்வு செய்து கிளிக்கினால் அன்றைய தினத்துக்கான பதிவுகள் வலதுபுறத்தில் தோன்றும்.
பேஸ்புக், டிவிட்டர் மற்றும் வலைப்பதிவு என பல சேவைகளை பயன்படுத்துபவர்கள் அவை அனைத்தையும் ஒரே இடத்தில் அணுக முடியும். பேட்ச் லைப்பில் முகவரி கணக்கை துவக்கிவிட்டு பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சேவைகளை அணுக அனுமதி அளித்து விட்டால் அதன் பிறகு தானாகவே உங்கள் பதிவுகள் இங்கே சேமிக்கப்பட்டு விடும்.
அதன் பிறகு உங்கள் இணைய நடவடிக்கையை திரும்பி பார்க்க விரும்பினால் எளிதாக அதை நிறைவேற்றி கொள்ளலாம். ஏதாவது சந்தேகம் எழுந்தாலும் அதை தீர்த்து கொள்ளலாம்.
இப்படி ஒரே இடத்தில் அனைத்து இணைய பகிர்வுகளையும் தொகுத்து தருவதோடு இதிலேயே தனியே உள்ள குறிப்பேடு வசதியை பயன்படுத்தி மனதில் தோன்றும் எண்ணங்கள் அல்லது சிறப்பு நிகழ்வுகளை பதிவு செய்து கொள்ளலாம்.
இணையதள முகவரி