Home » » உங்களுக்கு தெரியுமா!

* பேச்சினைப் புரிந்து டெக்ஸ்ட்டாக மாற்றும் முதல் சாப்ட்வேர் பெயர் “Hearsay” ஆகும். இது இந்தியாவில் தயாரிக்கப்பட்டது.
* கலிபோர்னியா பல்கலைக் கழகம் அண்மையில் மேற்கொண்ட ஆய்வின் முடிவின் படி, ஆண்டுக்கு 16,93,000 டெரா பைட்ஸ் அளவிற்கு டேட்டா உருவாக்கப்பட்டு சேமிக்கப் படுகிறது.
* மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு அடுத்த படியாக சாப்ட்வேர் தயாரிப்பில் இரண்டாவது நிலையில் உள்ள நிறுவனம் அடோப் ஆகும்.
* எதிர்காலத்தில் ஹார்ட் டிஸ்க்கில் ஓர் அங்குல இடத்தில் லட்சத்தில் ஒரு பகுதியில் ஒரு ட்ராக் அமைத்து எழுதப்படும். அதாவது ஓர் அங்குலம் ஒரு கோடி பகுதியாகப் பிரித்து ஒவ்வொரு பகுதியிலும் ஒரு ட்ராக் அமைக்கப்படும்.
* சன் மைக்ரோ சிஸ்டம் நிறுவனத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் கோஸ்லிங் என்பவர் ஜாவாவினை உருவாக்கினார். இந்த ஜாவா என்ற பெயரை ஒரு காப்பி ஷாப்பில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில் அவருக்கு உதயமானது.
*முதல் இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் நிறுவனம் காம்ப் சர்வ். இது 1969ல் தன் பணியைத் தொடங்கியது.
* 50 கிகா பைட்ஸ் என்பது எவ்வளவு? ஒருவரி இடைவெளியில் டைப் செய்யப்பட்ட காகிதங்களை பாரிஸ் நகர எய்பில் டவர் உயரத்தின் மூன்று பங்கு அளவிற்கு அடுக்கினால் வரும் ஸ்டோரேஜ் திறன் தான் 50 கிகா பைட்ஸ்.