Home » , » Matlab எளிய அறிமுகம் (1)

இலங்கை பல்கலைக்கழகங்களில் பொறியியல் பீடங்கள் Matlab உபயோகிப்பதை வரவேற்கின்றன. கட்டாயமாக இல்லாவிட்டாலும் Matlab மூலம் பொறியியல் தேவைகளை நிறைவேற்ற வழி காட்டுகின்றன.  பொதுவாக இலங்கையில் matlab பற்றிய கற்கைகள் இல்லை. எனவே இப்பதிவின் மூலம் Matlab பற்றி தமிழில் தொடராக பதிவதன் மூலம்  ஆக குறைந்தது அதன் அடிப்படைகளையாவது உங்களுக்கு புரிய வைத்து அதன் மூலம் அடிப்படை கணித செய்கைகளை செய்யும் நிலைக்கு உங்களை உயர்த்த முடியும் என எதிர் பார்க்கிறேன்.



Matlab மட்டுமின்றி Wolfram Research Mathematica  ம் பொறியியலில் பயன்படுகிறது. ஆனால் Matlab பற்றிய அறிவு போதுமானது.

இந்திய பொறியியல் பாடத்திட்டம், இலங்கை பொறியியலை விட மிக மிக இலகுவானது. இப்பதிவு இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்  Civil, Electric / Electronic Engineering பாட திட்டங்களுக்கு அமைவாக அமையும்.

அப்படியென்றால் பொறியியலாளர்கள் தவிர பிறருக்கு இப்பதிவு பயன்படாதா? நிச்சயம் பயன்படும். கணிதம் எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம் Matlab இன் அறிவு பயன்படும்.

அறிமுகம் 

உலகின் பெரும்பாலான கணித்தல்கள், எதிர்வு கூறல்கள், திட்டமிடல்கள் என அனைத்தும் கணனியில்  செய்ய Matlab பயன்படுகிறது. 5+5 என கூட்டுவது முதல் தொலைந்த MH370 விமானத்தை Satellite Images இல் தேடுவது வரை இதில் செய்யலாம்.

பயன்கள்

  • Numeric Computation
  • Data Analysis and Visualization
  • Programming and Algorithm Development
  • Application Development and Deployment
  • Parallel Computing
  • Math, Statistics, and Optimization
  • Control System Design and Analysis
  • Signal Processing and Communications
  • Image Processing and Computer Vision
  • Test and Measurement
  • Computational Finance
  • Computational Biology
  • Code Generation and Verification
  • Application Deployment
  • Database Connectivity and Reporting

பதிவுகளின் உள்ளடக்கங்கள் 

Matlab இல் எண்ணற்ற செய்முறைகள் இருந்த போதிலும், கணணிக்கல்லூரிகளின் பதிவில் அடிப்படை கணிதம், பொறியியல் கணிதம், ஒத்திசைவுகள், பகுப்பாய்வு  பற்றியே எதிர் பாருங்கள்.

தரவிறக்கம்

$2,650 க்கு விற்கப்படும் இதை ஒரு போதும் நாம் பணம் செலுத்தி வாங்க முடியாது. வழமை போல Crack இனை பயன் படுத்த வேண்டியது தான் ஒரே வழி.

கீழே உள்ள Torrent Link இல் இயங்கும் தரமான Matlab R2013a உள்ளது.


Matlab 2014 வெளியான போதும் Matlab 2013 போதுமானது. இது 5GB அளவில் உள்ளது என்பதையும் கவனிக்க.

நிறுவுதல் 

இதன் உள்ளேயே நிறுவும் முறை உள்ளது. மேலதிக தகவல்கள் தேவை என்றால் இங்கே  தொடர்புகொள்ளுங்கள்.

முன்னெச்சரிக்கைகள்

இது இயங்க Windows 7 /xp ம் 2GB ram ம் அடிப்படை தேவைகள். நிறுவ 10GB க்கு உரிய இடம் தேவைப்படும்.

வரும் நாட்களில் இவை தொடர்பான PDF களை கணணிக்கல்லூரியில் எதிர் பாருங்கள். இப்பதிவுக்கு கிடைக்கும் ஆதரவு, பின்னூட்டங்களை பொறுத்தே அடுத்த பதிவு Matlab அடிப்படை கட்டளைகள் (2) பதிவிடப்படும்.