பென்ட்ரைவினை பாதுகாக்க சில வழிகள்

இப்பொழுதெல்லாம் யூஎஸ்பி பென்ட்ரைவ் இல்லாதவர்களை பார்ப்பது மிகவும் அரிது. ஏனெனில் கணணி பயன்பாடு அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.கணணி எப்படி எல்லோருக்கும் தெரிந்திருக்கிறதோ அது போல் பென்ட்ரைவினையும் தெரியும் ஏன் என்றால் இப்பொழுது வரும் ம்யூசிக் சிஸ்டங்கள் எல்லாம் யூஎஸ்பி பென்ட்ரைவ் ஆதரிக்கும் வகையில் வெளிவருகிறது.
அது போலவே எல்சிடி, எல்இடி டிவிக்களும், டிவிடி ப்ளேயர்களும் பென்ட்ரைவினை ஆதரிக்கும் வகையில் வெளிவருகிறது. அதனால் எல்லோருக்கும் பென்ட்ரைவினை பாதுகாக்கும் வழிகள் தெரிந்து கொள்ள ஆசை வருகிறது.
1. Disabled Autorun - ஆட்டோ ரன் நிறுத்தம்: பென்ட்ரைவினை கணணியில் செருகியவுடன் ஆட்டோ ரன் ஆகும். இதனால் இதில் உள்ள கோப்புகள் எந்த மென்பொருள் மூலம் திறக்க வேண்டும் என்று விண்டோஸ் காட்டும். இதன் மூலம் வைரஸ்களும் எளிதாக தொற்றும். இதை முதலில் தடுக்க வேண்டும். இதற்கு AutoRun Disable செய்ய வேண்டும்.
இதற்கு மைக்ரோசாப்டிலேயே தனியாக பேட்ச் மென்பொருள் கிடைக்கிறது. இதை நிறுவினால் உங்கள் கணணியில் சீடி, டிவிடி, பென்ட்ரைவ் எது போட்டாலும் தானாக ப்ளே செய்யாது. அதாவது Auto Play Run தானாக நடக்காது.
2. Scan Your Pen Drive - பென்ட்ரைவினை சோதித்தல்: ஒவ்வொரு முறை உங்கள் பென்ட்ரைவினை கணணியில் செருகும் பொழுது உங்கள் கணணியில் உள்ள ஆன்டிவைரஸால் கட்டாயம் சோதிக்க வேண்டும். இதன் மூலம் கணணியிலும் வைரஸ் வராமல் தடுக்க முடியும். அத்துடன் பென்ட்ரைவினில் வைரஸ் இருந்தாலும் தடுக்க முடியும்.
அதற்கு உங்கள் கணணியில் நல்ல ஆன்டிவைரஸ் கட்டாயம் நிறுவி இருக்க வேண்டும். ஆன்டிவைரஸ் நிறுவுவதோடு நின்று விடாமல் உங்கள் ஆன்டிவைரஸ் தினமும் அப்டேட் ஆகிறதா என்றும் சோதித்துக் கொள்ளுங்கள். பென்ட்ரைவினை செருகியவுடன் உங்கள் கணணியில் Go To > My Computer > சென்று அங்கு உங்களுடைய பென் ட்ரைவினை Right Click செய்து Scan செய்யவும்.
3. Safely Remove Your Pen Drive - பென் ட்ரைவினை பாதுகாப்பாக நிறுத்துதல்: இது முக்கியமான ஒன்று நிறைய பேர் இந்த தவறினை செய்கிறார்கள். அது என்னவென்றால் பென்ட்ரைவில் இருக்கும் கோப்புகளை நேரடியாக பென்ட்ரைவ் வழியாக திறப்பது. சரி திறப்பது கூட பரவாயில்லை அந்த கோப்பினை பென்ட்ரைவில் வைத்து கொண்டே வேலை செய்வது.
இதனால் என்னாகிறது பென்ட்ரைவ் தொடர்ந்து வேலை செய்ய வேண்டி வரும். இதனால் சீக்கிரம் பென்ட்ரைவ் பழுதாகிறது. இதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் பென்ட்ரைவில் எந்த கோப்பினை எடிட் செய்ய விரும்புகிறீர்களோ அதை கணணியில் சேமித்து விட்டு பிறகு கணணியில் இருந்து எடிட் செய்யுங்கள். அதுவே மிகவும் சிறந்தது.
அடுத்து யூஎஸ்பியை நிறுத்தாமல் அப்படியே பென்ட்ரைவினை பிடுங்குவது. எல்லோருமே யூஎஸ்பி பொருட்களான பென்ட்ரைவ், டிவிடி ட்ரைவ் பாக்கெட் ஹார்ட் டிஸ்க்குகள் போன்றவற்றை விண்டோஸில் இணைந்திருக்கும் மென்பொருட்கள் வழியாக நிறுத்திய பிறகே எடுக்க வேண்டும்.
அப்படி இல்லாவிடில் சிறு மென்பொருட்கள் இருக்கிறது. யூஎஸ்பியை நிறுத்துவதற்கென்றே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் நமக்கு தேவையான யூஎஸ்பி பென்ட்ரைவ் அல்லது வேறு எந்த யூஎஸ்பி வன் பொருட்களையும் இந்த மென்பொருட்கள் மூலம் நிறுத்திய பிறகு எடுக்கலாம்.
4. General Tips - சில பொதுவான வழிமுறைகள்: அடுத்து நம் உபயோகிக்கும் பென்ட்ரைவினை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்வதற்காக வைத்திருக்கிறோம் என்பதற்காக அதை எப்பொழுதும் கழுத்திலேயே மாட்டி வைத்திருப்பது அல்லது மிகவும் சூடான பகுதிகளில் வைப்பது போன்றவைகளை கட்டாயம் தவிருங்கள்.
அத்துடன் வீட்டினுள் கணணி, ஸ்பீக்கர் அல்லது ஹோம் தியேட்டர்கள் மீது பென்ட்ரைவினை வைப்பதையும் தவிர்த்து விடுங்கள். ஏன் என்றால் இதில் எல்லாமே காந்தசக்தி இருப்பதால் சுலபத்தில் உங்கள் தகவல்கள் யூஎஸ்பி பென்ட்ரைவில் இருந்து காணாமல் போய் விடும்.
சில நேரங்களில் யூஎஸ்பி பென்ட்ரைவ் தண்ணீரில் விழுந்து விட்டால் உடனே எடுத்து துடைத்து விட்டு கணணியில் உபயோகப்படுத்தாதீர்கள். தண்ணீரில் விழுந்த பென்ட்ரைவினை 48 மணி நேரங்கள் கழித்தே உபயோகிக்கவும்.
அந்த இடைவெளியில் உங்கள் பென் ட்ரைவினை சமையல் செய்து வைத்த பாத்திரத்தில் மிதமான சூடு இருக்கும் பட்சத்தில் அதன் மேல் வைத்தால் ஓரளவு தண்ணீர் இழுக்கும்.
அது போல உங்கள் அரிசி வைத்திருக்கும் பாத்திரத்தில் போட்டு வைத்தால் உங்கள் பென்ட்ரைவில் இருக்கும் நீர் சுலபமாக வெளியேற்றப்படும். ஏன் என்றால் அரிசி நீரினை அதிகளவு உறிஞ்சும் தன்மை உடையது.


ஓன்லைன் கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள்

ஓன்லைன் மூலம் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.இதே நேரத்தில் ஓன்லைன் மூலம் கொள்ளையடிப்பதும் அதிகரித்து வருகிறது. இவற்றில் இருந்து நம்மை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் கீழே தரப்பட்டுள்ளன.
1. ஓன்லைன் மூலம் பொருட்கள் விற்கும் நிறுவனங்கள் தங்களின் வங்கி கணக்கை கொடுத்து அதற்கு பணம் அனுப்ப சொல்லலாம்.
2. இணையதளம் பயன்படுத்தும் நாம் இமெயில் மற்றும் வங்கி கணக்கு பயன்படுத்துவதாக இருந்தால் அதற்கு தனி உலாவியும் மற்றபடி தளங்களை பார்ப்பதற்கு தனி உலாவியும் பயன்படுத்தலாம்.
3. Crack செய்து கொடுக்கும் மென்பொருளை ஒரு போதும் தரவிறக்காதீர்கள் இதனுடன் தற்போது உங்கள் கடவுச்சொல்லை அனுப்பும் ஸ்கிரிப்டும் கூடவே வருகின்றது.
4. பணம் அனுப்பும் தளத்தின் முகப்பில் “https” என்று இருக்கிறதா என்று ஒரு முறைக்கு இருமுறை பார்த்துக் கொள்ளுங்கள்.
5. கடவுச்சொல் தட்டச்சு செய்யும் போது உலாவியில் ஏதாவது தகவல் வந்து Ok , close என்று இருந்தால் நீங்கள் Esc பொத்தானை மட்டும் அழுத்துங்கள். ஏன் என்றால் ok, cancel , close எதை அழுத்தினாலும் ஒரே வேலையைத் தான் செய்யும்.
5. உலாவி பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது இடையில் Close அல்லது Restart. ஆனால் கண்டிப்பாக உங்கள் கவனம் உலாவியின் மேல் இருக்கட்டும்.
6. கடவுச்சொல்லை ஒரு போதும் உங்கள் கணணியில் சேமித்து வைக்காதீர்கள். ஒவ்வொரு முறையும் தட்டச்சு செய்து உள் நுழையுங்கள்.
7. நெட்கபேகளில் சென்று பேங்க் Transaction செய்வதை கூடுமானவரை தவிர்க்க பாருங்கள். பயன்படுத்தியே ஆகவேண்டும் என்றால் Firefox உலாவியை பயன்படுத்தி Transaction செய்யுங்க



கைத்தொலைபேசிகளின் கதிர்வீச்சிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள
உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தகவல்களை பெறுவதற்கு கைத்தொலைபேசிகள் பயன்படுகின்றன. இதில் உள்ள வசதிகளால் பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ச்சியை அடைந்து கொண்டுள்ளது.இதில் கவனிக்க வேண்டிய விடயம் இந்த கைத்தொலைபேசிகளில் எந்த அளவு நன்மை உள்ளதோ அதை விட இருமடங்கு தீமைகளும் உள்ளது. தீமைகளில் முக்கியமானது இதன் கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது.
இதன் கதிர்வீச்சினால் மூளையில் இரண்டு வகையான(Gliomas, Acoustic neuromas) புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் கைத்தொலைபேசி உபயோகிப்பவர்களிடம் இருந்து இந்த நோய் உருவாகும் சூழல் காணப்படுகிறதாம். ஆகவே முக்கியமான விடயம் நாம் கைத்தொலைபேசி உபயோகிப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.
1. முடிந்த அளவு கைத்தொலைபேசிகள் உபயோகிப்பதை தவிருங்கள். லேண்ட்லைன் உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் கைத்தொலைபேசிகள் உபயோகிப்பதை தவிர்த்து விடவும். ஏனென்றால் லேண்ட்லைன் போன்களை விட கைத்தொலைபேசிகள் பாதிப்பு அதிகம்.
2. ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால் போன் பண்ணுவதை தவிர்த்து SMS வசதியை உபயோகிக்கவும்.
3. குழந்தைகளிடம் கைத்தொலைபேசிகளின் பேசுவதோ, கொடுப்பதோ வேண்டாம். குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதீர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.
4. உங்கள் கைத்தொலைபேசியில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில்(Rural area) பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம்.
5. காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட கைத்தொலைபேசிகளின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது. ஆனால் பொது இடங்களில் இது போன்று பேசும் பொது மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.
6. தூங்கும் பொழுது போனை அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும்.
7. நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை ஓன் செய்தவுடன் போனை காதில் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் பேசும் பொழுது ஏற்படும் கதீர்வீச்சு அளவைவிட ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.
8. கைத்தொலைபேசிகளில் பேசும் பொழுது வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.
9. கைத்தொலைபேசிகளில் விளையாடுவதை முடிந்த அளவு தவிர்க்கவும். முக்கியமாக பயணம் செய்யும் பொழுது விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள். ஏனென்றால் கண்களை சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
10. கைத்தொலைபேசிகளை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.
11. கைத்தொலைபேசிகளை சட்டையின் இடது பக்க பாக்கட்டில் வைக்க வேண்டாம். இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம்.
12. கைத்தொலைபேசியில் பேசும் பொழுது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும். கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். உங்களுடைய போனின் Internal Antena பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். இதற்கான வழிமுறையை உங்கள் Manual புத்தகத்தில் பார்த்து கொள்ளவும்.