கேள்வி: சிடி ஒன்றில் டேட்டாவினை பர்ன் செய்து முடிக்கும் போது, இறுதியில் அதன் ஐ.எஸ்.ஓ. இமேஜ் எழுதி வைக்கவா என்று ஒரு கேள்வி கிடைக்கிறது. பெரும்பாலும் இதற்கு நோ சொல்லி மூடி வருகிறேன். இது எதற்காக? பயன் என்ன?
Partheepan
பதில்: ஐ.எஸ்.ஓ. இமேஜ் என்பது ஒரு சிடி அல்லது டிவிடியில் பேக் செய்யப்பட்ட பைல்கள் அனைத்தின் இமேஜ் ஆகும். அதாவது அனைத்து பைல்களும் இடம் பெறும் ஒரு கூட்டுத் தொகுப்பாகும். இதனைத் தயாரித்துப் பதிந்து வைத்தால், சிடியில் எழுதப் பயன்படும் சாப்ட்வேர் அனைத்தும் இந்த இமேஜ் பைலை எடுத்து நேரடியாக இன்னொரு சிடியில் எழுதப் பயன்படுத்திக் கொள்ளும். எனவே குறிப்பிட்ட பைல் தொகுதியினை நிறைய சிடிக்களில் எழுத வேண்டுமானால், நேரத்தை மிச்சப்படுத்திச் செயலை முடிக்க இதனைத் தயாரித்துக் கொள்வது நல்லது. இதில் ஒரு சிக்கல் என்னவென்றால், என்ன என்ன பைல்கள் உள்ளன என்று குறிப்பெடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அல்லது அடையாளம் காணும் வகையில் பெயர் தந்து சேவ் செய்து கொள்ள வேண்டும். அதிக எண்ணிக்கையில் ஐ.எஸ்.ஓ. பைல்களை உருவாக்குகையில் இந்த ஏற்பாடு மிக அவசியம்.


கேள்வி: என்னுடைய கேமராவிலிருந்து நான் எடுத்த சில போட்டோக்களை அழித்துவிட்டேன். அவற்றை மீண்டும் பெற முடியுமா?.
பதில்: தொடர்ந்து அதனைப் பயன்படுத்தி வேறு போட்டோக்கள் எடுக்காமல் இருந்தால், கம்ப்யூட்டருடன் அதனை இணைத்து, ரெகுவா (Recuva) போன்ற அழித்த பைல்களை மீட்டுத் தரும் புரோகிராம்கள் மூலம் மீட்க வாய்ப்புண்டு.

கேள்வி: என் கம்ப்யூட்டருடன் யு.எஸ்.பி. ஹப் ஒன்றை இணைத்து, என் மவுஸ், கீ போர்ட் மற்றும் ஸ்கேனர் சாதனங்களை இணைத்துப் பயன்படுத்துகிறேன். அண்மையில் எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க் ஒன்றை வாங்கி, இதில் இணைத்துப் பயன்படுத்தினேன். அப்போது மற்ற சாதனங்கள் இயங்கவில்லை. இருப்பதை கம்ப்யூட்டர் காட்டவில்லை. ஏன்? இதற்கு என்ன வழி?
பதில்: யு.எஸ்.பி. கேபிள்கள் குறிப்பிட்ட அளவில் தான், இயங்குவதற் கான மின்சக்தியைப் பெற்று இயங்கும். எனவே, அளவுக்கதிகமாக சாதனங்கள் இணைக்கப்படுகையில், அனைத்து சாதனங்களும் இயங்கும் என்று எதிர்பார்க்க முடியாது. உங்கள் யு.எஸ்.பி. ஹப் தனியே பவர் சப்ளையைப் பெற்று இயங்குமா என்பதனைச் சோதனை செய்து, முடியும் என்றால், தனியே மின் சக்தி இணைப்பினைத் தரவும். அல்லது ஹார்ட் டிஸ்க்கிற்க்கு தனியே வேறு ஒரு யு.எஸ்.பி. போர்ட்டினைப் பயன்படுத் தவும்.