இன்று முட்டாள்கள் தினம். இதை முன்னிட்டு கூகிள் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொன்று செய்கிறது. இம்முறை...... ஒருமுறை கை அசைவுகளை கொண்டு கணணியை கட்டுப்படுத்தலாம் என்று சொன்னார்கள் . போன முறை 8 Bit Google map. இன்றும் அப்படி ஒன்று........ இங்கே சென்று பாருங்கள்.. தேடல் முடிவுகளை மணக்கலாம் என்று சொல்லி விட்டு எதை எதை எல்லாம் மணக்க விடுகிறார்கள்..நீங்கள் ஒரு வேளை மணத்தால் (மணக்கவிட்டாலும்), இறுதியில் ஒரு Error வரும். அதில் "பின்வரும் தொழில் நுட்ப தகவுகள் தேவை" என்று சொல்லிவிட்டு Android OS தேவையாம், Chrome இல் தான் இது சிறப்பாக இயங்குமாம்....... இப்படி தங்களுக்கு தாங்களே விளம்பரம் போடுகிறார்கள்.
எவ்வாறாயினும் கூகிள் பொறியலாளர்களை பாராட்ட தான் வேண்டும். யாருமே சிந்திக்கத வகையில் புதிய புதிய எண்ணக்கருக்களை உருவாக்கி விடுகிறார்கள்.
இதை விட இன்னும் சில முட்டாள் தனங்களை செய்து இருக்கிறார்கள். Google map, Youtube, Gmail, Analytic என்ற பிரிவுகளிலும் இதை காணலாம். என்றாலும் மணந்து பார்ப்பதே சுவாரசியமான நிகழ்வு ...
It is April Fools' Day.