Home » » இணைய தமிழ் தொலைக்காட்சி இணைப்புக்களை திரட்டுவதில் உங்கள் பங்களிப்பு

இப்பதிவு கணணிக்கல்லூரி வாசகர்கள் ஆகிய உங்களிடம் இருந்து இணைய தொலைகாட்சி இணைப்புக்களை திரட்டும் நோக்கில் பதியப்படுகிறது.
இணைய தொலைக்காட்சி வரலாற்றில் அண்மைக்காலமாக  தமிழ் தளங்களை மக்கள் நாடுவது அதிகமாகி விட்டது. இதற்காகவே பல தளங்கள் உண்டு. துரதிஷ்டவசமாக எந்த தளத்திலும் பூரணமாக அனைத்து அலைவரிசைகளும் கிடைப்பதில்லை. பல இயங்குவதே இல்லை. அரிதாக கிடைக்கும் அலைவரிசைகள் கூகுளில் தேடி பெற முடிவதில்லை.


இதனால் இணையத்தில் கிடைக்கும் அனைத்து தொலைக்காட்சிகளையும் ஒரே இடத்தில் பார்க்க ஒரு ஏற்பாடாக வலைத்தளம் ஒன்று ஆரம்பித்தேன். http://tv.tamilcc.com/ இத்தளத்தில் Beta நிலையில் பல இணைய தொலைக்காட்சிகளை இணைத்துள்ளேன்.

உங்களிடம் எதிர் பார்க்கும் உதவி என்னவென்றால் நீங்களும் நிச்சயம் இதுவரை ஏதோ ஒரு இணைய பக்கத்தில் இவற்றை காண்பீர்கள். அப்படி நீங்கள் காணும் அலைவரிசை, மற்றும் அதன் இணைய முகவரி ஆகியவறை தந்தால் போதும். அவற்றில் இருந்து தேவையான அலைவரிசைகளை தொகுக்க முடியும்.

தயவுசெய்து உங்களுக்கு தெரிந்த தளங்களை பகிருங்க.
கவனிக்க:

  • தமிழ் சேவைகள் மட்டும் விரும்பபடுகின்றன. (Eg: சிரிப்பொலி)
  • இணைய முகவரி போதும். Rtmp இனை பதிய வேண்டிய அவசியம் இல்லை. (Eg: http://freeasia.tv/)
  • இயங்கும் அலைவரிசைகளை மட்டும் தாருங்கள். 
  • Silverlight , VLC plugin, JW player  Flowplayer என எதை கொண்ட சேவை என்றாலும் பரவாய் இல்லை.
இதன் மூலம் எதிர் பார்ப்பது :
  • தமிழ் தொலைகாட்சிகளை தேடி அலையாமல் ஒரே இடத்தில் பெற வழி செய்தல்.
  • எதிர்காலத்தில் நேரடியாக VLC, winamp போன்றவைகள் மூலம் நேரடியாக playlist மூலம் டிவி பார்க்க ஏற்பாடு. (வானொலி கேட்பது பற்றிய பதிவு இங்கே )
  • இயங்காத அலைவரிசைகளை உடனுக்குடன் பார்வையாலராகிய உங்கள் உதவியால் நீக்கி புதிய இணைப்புகளை ஏற்படுத்தல்.
இறுதியாக, 
இத்திட்டம் வெற்றி பெறுமா இல்லையா என்பது உங்கள் கைகளில் தான் தங்கி உள்ளது. ஆக குறைந்தது வாசகர்களாகிய உங்களிடம் இருந்து ஒவ்வொரு பதிவு வீதம் 500 form submissions எதிர் பார்க்கிறேன்.

Comment Box அல்லது கீழ் உள்ள படிவம் மூலம் சமர்ப்பியுங்கள்.