டோர்றேண்டில் இருந்து கோப்புக்களை விரைவாக பெற ஒரு வழி - An Easy Way to Get files from Torrent without Cilent

இப்பதிவு எப்படி விரைவாக Torrent clients இல்லாமல் Torrent தளங்களில் இருந்து இடையூறு இல்லாமல் விரும்பியவற்றை Internet Download Manager போன்ற மென்பொருட்கள் மூலம் தரவிறக்குவது என்பதை விளக்குகிறது.

இதே வேலையை செய்ய சில Chrome extensions இருந்த போது அவை அவ்வளவு பயனளிப்பதில்லை.

இதற்காக நாம் பயன்படுத்த போகும் ஒரு இலவச சேவை Zbiz ஆகும். இதை பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. என்றாலும் அண்மையில் ஒரு நண்பருடன்  தொடர்பு கொண்ட போது தான் பலர் Torrent பற்றியோ, அல்லது இது பற்றியோ அறியவில்லை என்று புலனாகியது. அதன் பின்னரே இதை பற்றி எழுதுகிறேன்.

இதன் பெரும் நன்மையே எப்போதும் மாறா வேகத்தில் கோப்புக்களை பெற முடிகின்றமை. சில சமயங்களில் 10 kBps இலும் குறைவான வேகத்தில் கூட Bittorrent இல் இருந்து பெற்ற அனுபவங்கள் உங்களுக்கு இருக்க கூடும்.
அதை விட எந்த Torrent Client இல்லாமலும் தரவிறக்க தேவை இல்லை.

மேலும் சில நன்மைகள்:


  1. இவர்கள் Copyright தொடர்பாக எமக்கு பச்சை கொடி காட்டுவதால் எதையும் தரவிறக்கலாம்.
  2. கவனிப்பார் அற்று கிடக்கும் சில மென்பொருட்களை விரைவாக பெற வழி இது மட்டுமே. எ.கா: Nero இன் ஆரம்ப பதிப்புக்கள்.
  3. பழைய தமிழ் படங்களை பெற உதவுதல் - தமிழ் படம் ஒன்று வந்தவுடன் அனைவரும் தரவிறக்குவார்கள். சில நாட்களில் எல்லாம் ஓய்ந்த பிறகு seeders இல்லாமல் உங்கள் வேகம் குறையலாம். அதற்கு இலகுவான வழி இதுதான். (இப்பதிவின் உதாரணத்தில் விஸ்வரூபம் திரைப்படம் தரைவிரக்கப்படுவதை மேற்கோள் காட்டுகிறது)
  4. தொழிநுட்ப ரீதியில் சில Torrent seeders உங்கள் Firewall மூலம் தடை செய்யப்படுவார்கள். இதை தொழிநுட்ப அறிவில்லாமல் கையாள முடியாது. இம்முறையில் Internet Download Manager உதவுவதால் வேறு பிரச்சனைகள் எதுவும் வராது.
  5. Resume பற்றி கவலைப்பட தேவை இல்லை. விட்டு விட்டு விரும்பிய வேளை தரவிறக்கலாம்.

கவனிக்க வேண்டியவை:


  1. பொதுவாக 1 - 2 GB க்கு உட்பட்ட கோப்புக்களை மட்டுமே தரவிறக்க இதை பயன்படுத்துங்கள். அளவு கூடினால் சில தொழில்நுட்ப கோளாறால் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டி இருக்கலாம்.
  2. என் அனுபவத்தில் 120kBps வேகம் தான் ஆக கூடியது. 8 GB ஆகிய இதன் உச்ச கொள்ளளவை தரவிறக்க 1 நாள் செல்லும்.
  3. இதில் GTA 4 எல்லாம் தரவிறக்க முடியாது. அவை எல்லாம் 15 GB இல் இருக்கும்.

இதன் தீமைகள் / மட்டுப்பாடுகள் :

இலவச சேவையில் இவை மட்டுப்படுத்தப்படும்.
  1. ஆக கூடியது 8GB
  2. ஒரு IP யில் 2 தரவிறக்கமே ஒரு நேரத்தில்.
  3. ஒரு கோப்பு 7 நாட்கள் மட்டுமே அவர்களின்  செர்வரில் இருக்கும்.

இதை எப்படி பயன்படுத்துவது?

இது தொடர்பான Screenshots கீழே பாருங்கள்.
  1. Torrent Site : http://thepiratebay.sx (or any magnet link / .torrent providers)
  2. Direct Download Site: http://zbigz.com/







வழமை போல; அனைவரை போலவும் நானும் இத்தளத்தில் எழுதுவது குறைந்ததற்கு காரணமாக நேரம் இல்லை என்ற சாட்டை உங்களிடம் முன் வைக்கிறேன். முன்பு தரமான தகவல்களை சில தளங்கள் தந்தார்கள். இப்போது அவர்கள் உறங்கி விட மழைக்காளான்களாக பலரும் தோன்றி எதேதோ  எழுதுகிறார்கள். 
நீங்களும் தொழிநுட்ப தொடர்கள், பதிவுகள் கணணிக்கல்லூரியில் எழுத விரும்பினால்  தொடர்பு கொள்ளுங்கள். Email:[email protected] or Direct contact form here


நீங்களும் முயற்சிக்க மன அலைகள் மூலமான பொருட்களின் அசைவுகள் - Telekinesis Mutation

learn telekinesisவழமை போல சற்று வித்தியாசமான தொழில்நுட்ப பதிவு. இதற்கு முதல் எழுதிய பிபனோச்சி எண்கள் ( Fibonacci number)  பற்றிய பதிவு. வாசித்து இருப்பீர்கள். இப்பதிவுக்கு முதல் இதை பற்றி ஆங்கிலத்தில் விரிவாக விக்கிபீடியாவில் தொகுத்து இருக்கிறார்கள். ஆங்கில புலமை உள்ளவர்கள் இங்கு சென்று வாசிக்கலாம்.


TK Mutation  என்னும் Telekinesis  பற்றிய எண்ணகரு  முதன் ஆழமாக முதலில் Looper என்னும் Hollywood திரைப்படத்தில் சொல்லப்பட்டது. Time Travel பற்றி ஆழமாக சொல்லும் அப்படத்தில் கதாநாயகனின் இளமை  பருவம், மற்றும் அவனது நண்பர்கள் சில மூலம் இது காட்டப்படுகிறது. அந்தரத்தில்  நாணயத்தை மிதக்க செய்வதில் இந்த Tk Mutation பயன்படுகிறது. இதை விட பல படங்களில் இது கிளையாக வந்து இருக்கின்றது. இது பற்றிய தொகுப்பை இங்கு காணலாம். Chronicle என்ற படம் முழுவதும் இத்திறனை கொண்ட 3 சிறுவர்கள் பற்றியது.

Telekinesis பொதுவாக பரவலாக Psychokinesis என அறியப்படுகிறது. Psychokinesis to refer to using the power of the mind to cause the movement of matter at a distance. சுருக்கமாக சொன்னால் மன அலைகள் மூலம் பௌதிக பொருட்களை அசைத்தல் எனலாம்.

இதை பற்றிய எண்ணக்கரு முதலில் 1890  இல்  Russian psychical researcher Alexander N. Aksakof ஆல் சொல்லப்பட்டது. இன்றைய ஆராய்ச்சிகள் ஒருவரின் நீண்ட நாள் பயிற்சி மூலம் ஒருவர் ஓரளவு TK mutation திறனை பெறலாம் என்கிறது. இது பொருட்களை அசைத்தல் மட்டும் இன்றி ஒளிர்வுகளை ஏற்படுத்தல், ஓசை உண்டாக்கல் என பலவகைப்படும்.

இதன் மூலம் move, lift, agitate, vibrate, spin, bend, break,  impact ஆகியவை செய்ய முடியும் என எதிர் பார்க்கப்படுகிறது.

இதன் அடிப்படை மன அலைகளை ஒன்று திரட்டி மன வலிமையால் சடப்பொருளின் அணுக்களின் அதிர்வை மாற்றி மேற்கூறிய விடயங்களை நிகழ்த்தல் ஆகும். இதை செய்பவரின் மனம் கட்டாயம் அமைதியான நிலையில் இருக்க வேண்டும். அதை விட முக்கியம் நீங்கள் உள ரீதியில் களைப்படையும் போது உடனடியாகவே TK mutation இனை கை விட வேண்டும். ஏன் எனில்  இது கடவுள் சம்பந்த பட்டதோ மாய மந்திரமோ இல்லை. மாறாக உடல் வலிமை, மன வலிமை சம்பந்த பட்டது.

இத்திறமை உள்ளவர்கள் மட்டுப்படுத்திய நிபந்தனையில் இதை செய்து காட்டினால் லட்சக்கணக்கான பணத்தை பரிசளிக்க பல நிறுவனங்கள் உள்ளன. இது வரை எவரும் இதை பெறவில்லை என்பது ஆச்சரியமான விடயம்.

கரண்டியை பார்வையால் வளைத்தல், கதிரையை தூக்குதல் போன்ற TK நிகழ்வுகள் பற்றி youtube இல் நீங்கள் காண முடியும். பொதுவாக ஒருவர் தனது மூளையின் 10% தை பயன்படுத்தும் போது TK mutation இல் 90% வரை பயன்படுத்தப்படுவதாக சொல்கிறார்கள்.

உலகில் குறிப்பிட தக்க அளவு சிறு சதவீதத்தினர் இத்திறனை பெற்று இருப்பதாக ஆய்வுகள் சொல்லுகின்றன. நீங்கள் கூட இத்திறனை பெற்ற ஒருவராக இருக்க கூடும்.

மறைந்த பிரபல Magician சாய் பாபா கூட இத்திறனை கொண்டவர் என சொல்லப்படுகிறது. இதை பற்றி இங்கு காணலாம்.

தவறாக விளங்கப்படும் சில சந்தர்ப்பங்கள்:

சில சமயம் சில பௌதிக நிகழ்வுகள் TK என பலர் நம்புகிறார்கள். இன்னும் பல நிகழ்வுகள் அப்பட்டமான கண்கட்டி வித்தை. சில உதாரணங்கள்-

  • பாடி கண்ணாடி குவளையை உடைத்தல் - பரிவு பற்றி படித்த 10 வயது பிள்ளை கூட இதை பற்றி அறியும்.
  • மனிதர்களை துண்டாக்கி மீள ஓட்டுதல் - Magic
  • வெற்று coke  can இனை விரிய வைத்தல்.
இப்படி இன்னும் பல. உண்மையில் இதை எவ்வாறு செய்கிறார்கள் என்று தெரியுமா? இதற்காகவே ஒரு தொலைக்காட்சி தொடர் உண்டு. இங்கு பல magic செய்கைகள் எப்படி செய்யப்படுகின்றன என தெளிவாக சொல்கிறார்கள்.. நீரில் நடப்பது முதல் நடு மைதானத்தில் யானையை கொண்டு வருவது வரை. நீங்களும் விரும்பினால் இதன் தினசரி தொகுப்பை youtube இல்  சென்று பாருங்கள் -  youtube.com/results.

இதை பற்றி ரஷ்ய விஞ்ஞானியின் ஆவண தொகுப்பு :




அடுத்த பதிவில் இந்த TK Mutation  இல் நீங்களும் தேர்ச்சி பெறுவது எப்படி, இதன் நன்மைகள், தீமைகள் பற்றி பார்ப்போம்.

பிபனோச்சி எண்கள் - ஓர் அறிமுகம் Fibonacci number

கணிதத்தில் சதுர எண்கள், முக்கோண எண்கள். வர்க்க மூல எண்கள், சிக்கல் எண்கள் என பலவகையனவை உண்டு. அதில் ஒன்று தான் இந்த Fibonacci  எண்கள். இதை பற்றி தமிழில் விக்கி மற்றும் இன்னொரு தளத்தில் மட்டுமே  அறிமுகங்கள் உள்ளன.  பிபனோச்சி தினம் 05.08.13 (mm/dd/yyyy) என்ற திகதி ஒழுங்கில் வந்ததால் நேற்று பல நாடுகளில் கொண்டாடப்பட்டது. என்றாலும் 05.08.13  (dd/mm/yyyy) என்ற நாம் பயன்படுத்தும்  திகதி இடல் முறையை பார்த்தால் எமக்கு இனி தான் இந்த தினம் வரும். அடுத்த இத்தினம் Aug 13, 2021 இல் வரும்.. இந்த பிபனோச்சி எண்கள் பற்றி ஒரு தொகுப்பாக இந்த பதிவு அமைகிறது.

கட்டுரைக்கு முதல், நான் இதை பற்றி பெரிதாக அறிந்திருக்க வில்லை. இணையத்தில் கிடைக்கும் தகவல்களை தொகுத்து இலகு படுத்தி உள்ளேன். அவ்வளவு தான். உங்கள் விமர்சனங்களை தெரிவிக்கலாம்.


Simple'ளா கேக்கிறேன்,   24157817 Fibonacci number'ரா?
ஆமா, 22வது Fibonacci number   ... By the way ... அது மந்தைவெளி P.சுப்ரமணியத்தோட  Phone Number"

இந்த வசனமே முதன் முதலில் தமிழர்கள் இடையே Fibonacci number  பற்றிய எண்ணத்தை அறிமுக படுத்தியது.
‘எந்திரன்’ படத்தில்  வந்த வசனமே  இது. படத்தை பார்த்தீர்களே தவிர இதை பற்றி சிந்தித்தீர்களா? (நான் படம் பார்க்கவே இல்லை).உலகின் அடிப்படையே இந்த  எண்கள் தான் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

பிபனோச்சி எண்கள்

13ம் நூற்றாண்டில் இத்தாலியக் கணித மேதை Leonardo of Pisa ( Leonardo Fibonacci என்றும் பெயர் உண்டு) என்பவர் வகுத்த எண் வரிசைதான் இந்த Fibonacci number.
0 இல் தொடங்கி, 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34, 55, 89, 144 என்று செல்கிறது இந்த எண் வரிசை. இந்த வரிசையை உற்று கவனித்தாலே தெரிந்துவிடும். ஒரு எண் தனக்கு முன் உள்ள எண்ணோடு கூட்டப்பட்டு அந்தக் கூட்டுத் தொகையே அடுத்த எண்ணாக இந்த வரிசையில் அமர்கிறது. 

சுருங்க சொன்னால் : F_n = F_{n-1} + F_{n-2},\!\,    [இங்கு:  F_0 = 0,\; F_1     = 1.]

விளக்கமாக சொன்னால்
     
  F(n):=  
  \begin{cases}
    0             & \mbox{if } n = 0; \\
    1             & \mbox{if } n = 1; \\
    F(n-1)+F(n-2) & \mbox{if } n > 1. \\
   \end{cases}

1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34, 55, 89, 144, 233, 377, 610, 987, 1597, 2584, 4181, 6765, 10946, 17711, 28657, ....

இவ் எண்தொடரும் இதன் பண்புகளும் கணக்கில் அதிகம் தொடர்பு இல்லாதவரையும் ஈர்க்கும் ஒரு கணிதக் கருத்து. இது இயற்கையில் அதிகளவு காணப்படுகிறது. அதை விட ஆதிகால மனிதர்களின் படைப்புகளிலும் நிறையவே உண்டு.

ஃபிபனாச்சி மரம்,  தொடரும் பின்னம், ஒருங்குகள் ஒருங்கும் வேகம், பாஸ்கல் முக்கோணம் பற்றி அடிப்படைகள் தமிழ் விக்கிபீடியாவில் தொகுத்துள்ளனர். (உசாத்துணையில் காண்க)


Golden Number


இதற்கு ஆழமான விளக்கங்கள் உண்டு. சுருங்க சொன்னால் ஒரு F எண்ணை அதற்கு முதல் உள்ள f என்னால் பிரிக்கும் போது வரும் விடை. இது எப்போதும்

\frac{1}{1}, \frac{2}{1}, \frac{3}{2}, \frac{5}{3}, \frac{8}{5}, \frac{13}{8}, \frac{21}{13}, \frac{34}{21}, ... =  1.618 ... இல் அமையும்

Fibonacci numbers அவதானிக்கப்படும் இடங்கள்

மனித உடலில் 

முதலில் எம் உடலில் இவை எங்குள்ளன என்று பார்ப்போம்.. "எங்கு என்றால்? இந்த எண் தொடரில் அமைந்த சில பாகங்கள் பற்றி காண்போம்.

1. இது உங்கள் கை விரலில் உள்ள எலும்புகளின் நீளத்தில் உள்ளது.
நீங்களே செய்து பார்க்க முதலில் மௌஸ் மீது இருந்து கையை எடுத்து அதில் சுட்டு விரலை கீழே உள்ள படத்தில் பொருந்துமாறு வைத்து பாருங்கள். உங்கள் எலும்புகளின் நீளங்கள் Fibonacci ratio ஆகிய  1.618 இல் அமைந்து இருப்பதோடு  Fibonacci numbers  இல் 2, 3, 5 , 8 உடன் பொருந்துகின்றன.




2. மனித கையில் முன் பகுதியின் விகிதம் 1.618 இல் இருக்கும்

           Golden section of the hand and forearm illustrating phi, the golden ratio, in its proportions

3. பாதங்களில் பிரிப்பு விகிதம் கூட Golden Number இல் இருக்கும்.


இதன் ஆச்சரியமே நீங்கள் குள்ளமானவராக, நெட்டையனவராக எப்படி இருந்தாலும் Golden number விகிதத்திலே தான் உங்கள் மேல் சொன்ன பாக நீளங்கள் இருக்கும்.

இன்னும் சொல்லலாம்:
  1. மூக்கு -1 துளை  2
  2. ஒரு உடல் - 2 கைகள்  - ஒரு கையில்  5 விரல் 
  3. இனப்பெருக்க தொகுதி 
Nautilus

விலங்குகளில்  

  • வண்ணத்து பூசியில் உடல் கோலங்கள்
  • முயல்களின் இனப்பெருக்கம்
  • Nautiluses உயிரின ஓட்டின் பிரிப்பு 
  • பசுக்கள் இனம் பெருகும் விகிதம் 
  • தேனீ கூட்டில் உள்ள தேனிகள் எண்ணிக்கை

Fluffy bunnies family tree

தாவரங்களில்

  1. உங்கள் வீட்டு தோட்டத்தில் உள்ள மரத்தின் கிளைகள்
  2. அன்னாசியில் உள்ள முகிழ்களின்  எண்ணிக்கை
  3. சூரியகாந்தி பூவின் இதழ்களின் எண்ணிக்கை  - பொதுவாக அனைத்து பூக்களுமே இதே எண் தொடரில் தான் இருக்கும்.
  4. வாழைப்பழத்தை குறுக்கே வெட்டினால் 3 பிரிவுகள், அப்பிள் பழத்தில் 5 பிரிவுகள் 

கட்ட கலையில்

  1. காஸா பிரமிட்களில் உயர விகிதம்  (Base:height:slant height)
  2. பிரான்சில் உள்ள Chartres Cathedral
  3. இந்தியாவின் தாஜ் மகால் 
  4. ஏதெனஸில் உள்ள Parthenon
  5. மோனாலிசா ஓவிய முக அமைப்பு 


மேலும் சில:
  1. குதிரை பந்தயத்தில் ஜெயிக்கும் குதிரைகைளின் எண்களின்  வரிசை இதில் இருக்குமாம்.
  2. விண்வெளியில் உள்ள நட்சத்திரக் கூட்டங்களில் உள்ள நட்சத்திர எண்ணிக்கை
  3. பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்கள்  இவ்  வரிசையின் அடிப்படையில்  நடைபெறுகிறதாம் 
  4. உலக இலக்கியங்கள் அனைத்திலும் உள்ள யாப்பு அமைப்பு முறை கூட இந்த எண் வரிசையை அடிப்படையாக கொண்டவை 

நீங்களும் பிபனோச்சி எண்களும்

நீங்கள் கூட இவ்வாறு இந்த எண் தொடரில் அமைந்த இயற்கையை காண முடியும். நிச்சயம் ஒருநாள் நீங்கள் சந்திக்கும் ஏதோ ஒரு நிகழ்வு - இயற்கையால் ஆளப்படும் இடத்தில் இந்த எண் வரிசையை உணர்வீர்கள். உங்கள் வாழ்க்கையில்  சில தருணங்களில் முடிவு எடுக்கும் போது இந்த தொடரையும் கவனத்தில் கொள்ளுங்கள். உங்களுக்கு சாதகமான / எதிர் பார்க்கும் முடிவுகள் கிடைக்கலாம்!!





உசாத்துணை :

அன்னையர் தினமும் கூகுளும் - Mother's Day with Google


Updated**

அன்னையர் தின Doodle
இதன் சிறப்பே, இந்த டூடுலில் சில தேர்வுகள் மூலம் நீங்கள் 27 விதமான அழகிய Doodle களை உருவாக்க முடிகின்றமை தான்..



இதன் மூலம் உருவாக்க கூடிய சில Doodles:

Mother's Dayஅன்னையர் தினம் நாட்டுக்கு நாடு வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலான நாட்டுகளில் ஒவ்வொரு May மாதமும் 2'ம் ஞாயிற்று கிழமை கொண்டாடப்படும். அந்த வகையில் 2013.05.12 நாமெல்லாம் அன்னையர் தினம் கொண்டாட போகிறோம். நாம் கொண்டாடுகிறோமோ இல்லையோ, இந்த வானொலிகள் அன்னையர் தினத்தை கொண்டாடுகிறோம் என்ற பெயரில் கேலி கூத்தாக்கி விடுவார்கள். அதிலும் சினிமா நட்சத்திரங்களை பிடித்து வர, அவர்களும்   ஏதோ நோபல்பரிசை வாங்கி தன் தாயை பெருமை படுத்திய கணக்கில் பேட்டி கொடுப்பார்கள்.


இதிலும்  Sooriyan FM,  அன்னையர் தினத்துக்கு  ஒரு கிழமை முதலே விளம்பரம் போட தொடங்கி விடுவார்கள். அன்னையர் தினம் என்று கேட்டால் தெரியும்.  காலை 6 மணி முதல் இரவு 10 மணி அனைத்து நடிக நடிகைகளையும் தொலைபேசியில்  அழைத்து வந்து  புலம்ப வைத்து விடுவார்கள்.

"நான் தான் உங்க ஸ்ரேயா  பேசிறன். நான் எங்கமாவுக்காக  Pray பண்றான்.. அப்ப நீங்க?"   இப்படி நகைச்சுவையாக பேசி கேட்கும் எங்களை வீட்டில் தர்மசங்கடத்துக்கு ஆளாக்கி விடுவார்கள்.

சரி இதெல்லாம் எதற்கு சொல்கிறேன்.? நேற்று Google, அன்னையர் தினத்துக்கான அறிவிப்பை வெளியிட்டது. நானும் ஏதோ புதிதாக இருக்கும் என்று ஓடோடி சென்று பார்த்தது...

சென்றது தான் தெரிந்தது... அவர்கள் அன்னையர் தினம் என்றால் எப்படி Google Products மூலம் அதை கொண்டாடலாம் என்று ஒரு விளக்கமே கொடுத்து இருந்தார்கள்.. என்றாலும், அதில் பிடித்த ஒன்று அவர்களின் Video தான். அழகான தொகுப்பாக நேர்த்தியாக edit செய்யப்பட்டு இருந்தது.

நீங்களும் விரும்பினால் Google இன் அன்னையர் தின பக்கத்துக்கு இங்கே google.com/mothersday செல்லுங்கள்.
அன்னையர் தினம் பற்றி விக்கியில் காண wikipedia.org/Mother's_Day



இன்றில் இருந்து Disqus Comment Box தானாக தோன்றுவது நிறுத்தப்பட்டு விட்டது. இனி நீங்கள் கருத்துரைகளை இட அல்லது ஏனையோரின் கருத்துரைகளை வாசிக்க ஒவ்வொரு பதிவின் முடிவில் உள்ள Open Comment Box என்ற Button மூலம் திறக்க வேண்டி இருக்கும். இம்மாற்றத்துக்கு காரணம் மெதுவான இணைய இணைப்பில் page load  ஆகும் போது Comment Box பலருக்கு திறப்பதே இல்லை. அத்துடன் Page Download time பாதிக்கப்படுகிறது.
இந்நடைமுறை Mobile இலும் இயங்கும் - தேவையான போது மட்டும் உங்கள் தெரிவாக...

அத்துடன் கணணிக்கல்லூரி முழுவதுமாக Responsive Design க்கு மாறி விட்டது. அது மட்டும் அல்ல Page Download வேகம் இயன்றளவு அதிகரிக்க வழிசமைக்கப்பட்டுள்ளது. Mobile, Desktop என இரண்டு வழியில் பார்க்கும் அனைவருக்கும் இனி ஒரே Design தான். என்றாலும் Mobile இல் வாசிக்கும் உங்களுக்கு சில அவசியமற்ற பகுதிகள் தோன்றாது - உங்கள் bandwidth இனை சேமிக்கும் ஒரு ஏற்பாடு.



2013.05.4 சில Email மூலம் பதிவுகளை பெறுபவர்களுக்கு துரதிஷ்டவசமாக ஒரே பதிவு 4 தடவை API  இல் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அனுப்பப்பட்டு விட்டது. தவறுக்கு மனம் வருதுகிறோம்.


அடுத்து கணணிக்கல்லூரியின் இயங்கு தளம் - இன்று வரை Google தரும் Blogger தான் . அண்மையில் ஒரு இணைய தளம் Wordpress க்கு மாறி இருந்தார்கள். Wordpress தான் உண்மையில் சிறந்த platform. பல Plugins உதவியுடன் இணையத்தையே ஆள  முடியும்.  ஆனால் அதை நிர்வகிப்பது கத்தி முனையில் நடப்பதை போன்றது. Database, Backup, Cache, Antivirus...  இப்படி எண்ணற்ற விடயங்கள்... அத்துடன் self hosting க்கு மேலதிக பணம் கூட கட்ட வேண்டும்..  இதனால் தான் இன்றுவரை சுதந்திரமான Blogger ல் இயங்குகிறோம்...



தொழில்நுட்ப துளிகள் May (1)

1.   இப்போது The Pirate Bay தளம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாட்டு Domain இல் செயற்படும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. இப்போது  thepiratebay.sx இல் இயங்கி வருகிறது. அண்மைக்காலங்களில் தமிழ் திரைப்படங்கள் உடனுக்குடன் பலரால் இங்கு பகிரப்படுவதால் இங்கும் பிரபலம் ஆக தொடங்கி விட்டது.

Embedded image permalink

2. Google + comment Box இல் சில மாற்றங்கள் சில தினங்களுக்கு முன்னர் வந்தது. வந்த உடனேயே, பல பிழைகள் இனம் காணப்பட்டு பலராலும் அதிருப்தி வெளியிடப்பட்டது.


3.வழமை போல  May 1 இல் இந்திய நேரப்படி நள்ளிரவில் USA Diversity Lottery 2014 Visa குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. நீங்களும் பதிவு செய்து இருந்தால் இங்கே - dvlottery.state.gov சென்று காணுங்கள்.

4. Google கொஞ்ச நாட்களுக்கு முன்  பல நாடுகளின் Street View தொகுப்பை வெளியிட்டது. இப்போது அனைத்தையும் திரட்டி தந்து Gallery இனை புதுப்பித்து உள்ளது. நீங்கள் இங்கே maps.google.com/gallery சென்று முழு தொகுப்பையும் காணுங்கள்.

5. வரும் June மாதம் பல API கள் செயல் இழக்கின்றன. Google Map v2, Twitter API V1.  Facebook  API இல் புதிய மாற்றங்கள் வருகிறது.  மேலும்....

ஒரு Entertainment:


Chrome Experiments இணையத்தில் பிரபலமானவை - அண்மையில் பார்த்த ஒரு experiment என்னை கவர்ந்தது. உங்கள் கணனியில் Web  Camera இருந்தால் கீழே உள்ள முகவரிக்கு சென்று பாருங்கள். நீங்கள் கையை அசைக்கும் ஒவ்வொரு விதத்துக்கும் அழகிய  Music இனை உருவாக்க முடியும். (தூரத்தில் நின்று பார்ப்பவர், நீங்கள் அந்தரத்தில் Table tenis விளையாடுவதாக எண்ணினால் நான் பொறுப்பல்ல)
Music Experiment - Google Chrome

இனி சில கீச்சுக்கள் :