மிகமிக மெதுவான இணைப்பிலும் Youtube காணொளிகளை காணுங்கள் - Watch Youtube streaming in Slow Internet Speed

அனைவருக்கும் Youtube இல் காணொளிகளை காண வேண்டும் என்று ஆசை. ஆனால் பல சமயங்களில் அது நிறைவேறுவதில்லை.பொதுவாக YouTube homeஇரவில் தான் நேரம் கிடைக்கும் ஆனால் இந்நேரம் இணைய இணைப்பு வேகத்தில் சுருங்கி விடும்.அடுத்தது  coverage பிரச்சனை. Network   Receiver, Busy என்றால் tower தானாகவே coverage தூரத்தை  குறைந்து கொள்ளும். இப்படி பல பிரச்சனைகள். ஆனாலும் youtubeஇல் பல தரமான காணொளிகள் , திரைப்படங்கள் என பல உண்டு. இவற்றை எப்படி பார்ப்பது என்று பார்ப்போம்.

விண்டோஸ் 7 இல் தேடும் வசதியில் சில சிறப்புக்கள் - Searching Tips in Windows 7

Windows 7 என்றாலே புதுமை. அதில் ஒரு சிறப்பான வசதி உடனடியாக தேடக்கூடியமை ஆகும். உங்கள் கணனியில் அதிகளவு files சேரும் போது  அவற்றில் உங்களுக்கு வேண்டியதை தேடுவது சிக்கலானது. பொதுவாக இணைய தேடு இயந்திரங்கள் எப்படி சில விசேட கட்டளைகளை பயன்படுத்தி தேடுடி மிக துல்லியமான முடிவுகளை தருகின்றனவோ அதே போல தான் windows 7 இலும் அதே வசதி உள்ளது.windows 8 அடுத்த வாரம் வரவுள்ள நிலையில் இதை பற்றி  பலர் அறிந்தது  இல்லை.  உங்கள் தேடல்களை இலகுவாக்க இங்கே சுருக்கமாக இதை காணுங்கள். சில தடவைகள் ப்யன்படுத்தும்  மனபபாடமாகி விடும். விரும்பினால் Right click மூலம் உங்கள் கணனியில் இந்த படத்தை சேமித்து அவ்வப்போது நினைவு படுத்திக்கொள்ளுங்கள்.

இலவசமான முன்னணி 5 Audio Recording & Editing Software

alternatives to audacityஇன்று இசைத்துறை என்பது இசைக்கருவிகளை நம்பி இல்லை. எந்த இசையையும் கணணி மற்றும் அதனோடு இணைந்த தொழில்நுட்ப கருவிகள் மூலம் உருவாக்கி விட முடியும். A.R. Rahman கூட தானும் இவற்றையே அதாவது Apple நிறுவனத்தின் Mac கணனியில்  Appleஇன் தயாரிப்பான Logic Pro என்ற மென்பொருளையே 12 வருடங்களாக பயன்படுத்துவதாகவும் Slumdog Millionaire படத்திலும்  oscar விருதிலும்  இதுவே துணை புரிந்ததாக கூறி இருக்கிறார். நம்ப முடியவில்லையா? நீங்களே சென்று www.apple.com/ இல் பாருங்கள். நீங்கள் இப்போது A.R. Rahman போல வருவதற்கு மென்பொருட்களை பயன் படுத்த வேண்டாம். உங்கள் வீட்டில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பான்படுத்துங்கள். Logic Pro 9 பதிப்பின் விலை $ 200 ஆகும். ஆனால் பல editing மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கிறது.

இப்போது Google data centers பொதுமக்கள் பார்வைக்கு - நீங்களும் சுற்றி பாருங்கள்

முதலில் கூகிள் data centers என்றால் என்ன என்று தெரியுமா? இதை அறியாத இணைய பாவனையாளர்கள் இருக்க முடியாது.  நீங்கள் தரவேற்றும் காணொளி என்றாலும் சரி புகைப்படம் என்றாலும் சரி இவை அனைத்தும் கூகிள் செவேர்களில் சேமிக்கப்படும். இவ்வாறான சேவர்கள் பல சேர்ந்த இடம் தான் data centers. இவை மிகுந்த பாதுகாப்பு உடையவை. Google இன் பிரதான data servers அத்திலாந்திக் சமுத்திரத்தில் உள்ளது. அதே போல facebook servers கிரீன்லாந்து பகுதியில் கடலுக்கு அடியில் உள்ளது. சாதாரண மக்கள்  நுழைய முடியாத இப்பகுதிகளை கூகிள் முதன் முறையாக தனது streetview இல் காட்சி படுத்தி உள்ளது. அத்துடன் தனது servers எப்படி பாதுகாக்கப்படுகின்றன? , எப்படி அங்கே வேலை செய்கிறார்கள்?, எப்படி சூழலுக்கு இயைபாக்கமாக servers அமைந்து உள்ளது? இப்படி பல தகவல்களை வழங்குகிறார்கள்.

காணொளிகள் பற்றி அனைத்தும் -Video Cheat Sheet

காணொளி, ( video) என்பது ஒளி மற்றும் ஒலிக் கோப்புகளை ஒருங்கே இணைத்து காட்டும் தொழில்நுட்பம் ஆகும். நிகழ்படக் கோப்புகள் பைட்டுகளிலேயே அளவிடப்படுகிறது. நிகழ்படக் கோப்பு வடிவங்கள் 3GP, MP4, WMV, AVI, FLV போன்ற பெயர்களில் வகைப்படுத்தப்படுகிறன. திரைப்படங்களும் தொலைக்காட்சியும் நிகழ்படக் காட்சிகளையே ஒளிபரப்புகின்றன. நிகழ்படத்தை பல படிவங்களின் தொகுப்பு எனவும் கூறலாம். நீங்கள் பலவிதமான வீடியோக்களை பயன்படுத்தி இருப்பீர்கள். ஆனால் இவை பற்றிய அடிப்படை அறிவு அனைவரிடமும் இருக்கிறதா என்றால் இல்லை என்றாய் கூற வேண்டும் .

வலைப்பூக்களுக்கான கூகிள் தேடும் விசேட பொறிகளை வடிவமைத்து இணைப்பது எப்படி? Google Custom Search Engine to Blogger


Google Custom Search Engine பற்றி அறிந்து இருப்பீர்கள். நீங்கள் உங்கள் வலைபூக்களுக்கு Google தரும் Search Engine   Widget மூலம் இதை இணைத்து இருப்பீர்கள். ஆனாலும் இவை பெரும்பாலும் உங்கள் வலைதளங்களில் இருந்து மட்டும் தேடல் முடிவுகளை தருவதில்ல்லை. அத்துடன் இவற்றை உங்களால் வடிவமைக்கவும் முடிவதில்லை. இப்பதிவின் மூலம் உங்கள் தேடும் பொறியை நீங்களே வைடிவமைத்து உங்கள் தளத்தில் இணைப்பது பற்றி அறிய முடியும்.

உங்கள் நுண்ணறிவை சோதிக்க HTML5இல் ஒரு வித்தை

நீண்ட காலத்தின் பின்னர், உங்களுடன் ஒரு HTML5 இணைய பக்கத்தை பகிர்ந்து கொள்கிறேன்.இணையத்தில் இப்படி ஏராளமாக உள்ளன. அதில் அனைத்தும் அனைவருக்கும் பயன்படுவதில்லை.அதேபோல இதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. உங்கள் பொது அறிவையும் நுண் அறிவையும் பரிசோதிப்பதே  இப்பக்கத்தின் நோக்கம். ஆனால் சற்று வித்தியாசம். நீங்களே என்னவென்று பாருங்கள்.ஒவ்வொரு படியும் முடிய அடுத்த படிக்கு செல்லுங்கள். hint கூட கிடைக்கிறது. முடியாவிட்டால் தானாகவே பதில் தரப்படும். இங்கு HTML5 பயன்படுத்தப்பட்டு இருப்பதால் நிச்சயம் ஒரு மாற்றத்தை உணரலாம்.

உங்கள் வீடு Google Map இல் புதுப்பிக்கப்பட்டால் உடனடியாக அறியவது எப்படி?

Google Map இப்போது அனைவரும் பயன்படுத்தும் ஒரு அவசிய இணைய பக்கம் ஆகி விட்டது. நெடுந்தூர பயணங்களில் கூட வரும் நண்பனாகிறது. பல இணைய வரைபடங்கள் இருந்தாலும் நமது ஊரின் சந்து பொந்துகள் எல்லாம் அளந்து எமக்கு தூரத்தை தருவது இது மட்டும் தான். அதை விட வேறு சில plugin உதவியுடன் உங்கள் காணியின் பரப்பளவை அளத்தல், கட்டிடங்களின் உயரத்தை அளவிடுதல், நீர்பம்பிகள் அமைக்க பொருத்தமான இடங்களை தெரிவு செய்தல் இப்படி பல வசதிகள் முற்றிலும் இலவசமாக கிடைக்கின்றன. ஆனால் இது பற்றி பலர் அறிந்தது இல்லை. முன்பெல்லாம் 2008 அளவில் எடுத்த புகைப்படங்களே வரைபடமாக இருந்தன. இப்போது அடிக்கடி புதுப்பிக்கப்படுகின்றன. இவ்வாறு உங்கள் வீட்டு பகுதி வரைபடம் புதுப்பிக்கப்படும் போது உடனடியாக அறிவிப்பை பெறுவது எப்படி என்று இந்த பதிவு விளக்குகிறது.

அனைவரும் அறிய வேண்டிய உலாவிகளின் குறுக்குவிசைகள் - FireFox & Chrome Shortscuts

இணையத்தை பயன்படுத்தாதவர்கள் இருக்க முடியாது. அதிலும் இன்று பலரும் Firefox அல்லது Google Chrome உலாவியை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த குறுக்குவிசைகளை பயன்படுத்துவோர் மிக குறைவு. ஒவ்வொரு தேவைக்கும் கிளிக் செய்வது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். செய்யும் வேலையை இலகுபடுத்த shorts cuts உதவுகின்றன.உங்களில் தேவையை இலகுவாக இங்கே ஒரே பார்வையில்  Firefox & Chrome Shorts cuts களை   காட்சிப்படுத்தி உள்ளேன்.  நினைவில் வைக்க முடியாவிட்டால் right-click செய்து save செய்து கொள்ளுங்கள். சிறிது நாட்கள் இதனுடன் பழகும் போது தானாகவே மனப்பாடம் ஆகி விடும்.