தேடுபொறி உகப்பாக்கம் - Meta Tag (SEO:2)

அண்மைக்காலங்களில் Meta Tag என்பது சில வலைபூக்களில் அதிகளவு கதைக்கப்பட்டது. அதற்கு பெரும்பாலான காரணம்  பிளாக்கரில் perment link அறிமுகப்படுத்தப்பட்டமையே ஆகும். எவ்வாறாயினும் இன்றைய கால கட்டத்தில் இந்த Meta Tag என்பது பயனற்ற ஒன்று. பொது அறிவிற்காக இதை பதிகிறேன். இறுதியில்  இது ஏன் பயனற்றது என்பதை பார்ப்போம். சில வருடங்களுக்கு முன்னர் இவ் விடயமே SEOவின் உயிர் நாடி. இன்று பயனற்ற ஒன்று. ஆரம்பத்தில் தேடுயந்திரங்கள் இவற்றை  ஆராய்ந்தே தேடுபவரின் keyword உடன்  எந்த  meta tag கொண்ட இணைய பக்கம்  அதிக அளவில் ஒத்து போகிறதோ அவையே முன்னையில் Seach Engineஇல் தோன்றுச்செய்யும்.

பதிவு திருடர்களுக்கு நிரந்தர தீர்வு (jQuery Methord)

கணணிக்கல்லூரியில் இதுவரை பதிவு திருடர்களை கண்காணிக்கும் முறை, எதை திருடினார்கள் எனபதை கண்டுபிடிக்கும் நுட்பம், பதிவு திருடர்களை தடுத்தல் என்ற வரிசையில் இறுதியாக பதிவு திருடர்களுக்கு நிரந்தர தீர்வு என்ற தலைப்பில் ஒரு நிரந்தர தீர்வை வழங்குகிறேன்.இதை எழுதி நீண்ட காலம் ஆகி விட்டது. ஆனால் இதை பயன்படுத்தி இதில் உள்ள சிக்கல்களை கண்டறிந்து உங்கள் முன் கொண்டுவரவே நீண்ட காலம் ஆகிவிட்டது. இப்போது இதில் எந்த பிரச்சனைகளும் இல்லை என்று என்னால் உறுதியாக கூற முடியும். எதாவது சந்தேகங்கள் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.

Disqus Comment Box பயன்படுத்துவது எப்படி?

வலைப்பூக்களுக்கு என்று பிளாக்கர் தவிர மூன்று தளங்கள் இலவச கமெண்ட் பாக்ஸ் சேவையை வழங்கி வருகிறார்கள். இதில் பரவலாக அனைவராலும் பயன்படுத்த ஆரம்பித்து இருப்பது இந்த DIsqus எனப்படும் சேவையை தான். எனினும் இன்னும் தமிழ் தளங்களில் இது பிரபலமாகவில்லை. Disqus பற்றியும் இதன் சிறப்புக்கள் பற்றியும் இதை இணைக்கும் முறை பற்றியும் எழுதிய பதிவை இத்தளத்தில் இங்கே சென்று காணுங்கள்.

Dear Tamil Computer College Readers, கணணிக்கல்லூரி வாசகர்களே,

அன்புள்ள கணணிக்கல்லூரி வாசகர்களே,
இந்த பதிவில் வாசகர்களாகிய உங்களுடன் சில தகவல்களை , அறிவிப்புகளை பகிர வேண்டி உள்ளது.

1) இன்றுடன் 100 Friend Connect  இணைப்பை பயன்படுத்துபவர்கள் இணைந்து உள்ளார்கள். நீண்ட காலமாக 98 இருந்த போதும் இன்று தான் 100ஐ தொட முடிந்ததது. இதற்கு வழிசமைத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. இதை விட feed Burner மூலமும் (91)   ட்விட்டர் (176) மூலமும் G+ மூலமும் இணைந்த வாசகர்களுக்கு நன்றிகள்.

தேடுபொறி உகப்பாக்கம் - அறிமுகம் (SEO:1)

SEO என்றால் என்ன? "தேடுபொறி உகப்பாக்கம் அல்லது தேடல் பொறி உகப்பாக்கம் (Search Engine Optimization -SEO) என்பது தேடுபொறிகளின் வழியாக ஒரு வலைத்தளம் அணுகப்படும் எண்ணிக்கையையோ அணுகுதலின் தரத்தையோ மேம்படுத்தும் செயல்முறையாகும்" என்று விக்கிபீடியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இங்கே சென்று மேலதிக தகவலை இது பற்றி அங்கே பெறுங்கள். SEO அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கமே தேடும் தகவல்களுக்கு ஏற்ப வலைத்தளங்களைத் துல்லியப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டமையே ஆகும்.

SEO -தொழிநுட்பத்தொடர்:0

SEO பற்றி தொடர் பதிவு எழுதலாம் என்று பல மாதங்களுக்கு முன்னரே எண்ணினேன். பலர் கூட அதை ஆவலுடன் கேட்டு இருந்தீர்கள். ஆனால் அதன் பின்னர் ப்ளாக் பக்கம் வர முடியவில்லை. நீண்ட இடைவெளியின் பின் இந்த SEO எனப்படும் Search Engine Optimizing  பற்றி எழுத தொடங்குகிறேன். உண்மையில் இது முதல் பகுதி அல்ல. வெறும் முன்னோட்டம் தான். இனி தான் ஒவ்வொன்றாக பார்க்கலாம். முன்னோட்டத்தில் சில விவரனங்களை இணைத்து உள்ளேன்.

ஆச்சரியம் மிக்க HTML5 கண்கவர் 404-Error Page வடிவமைப்புகள் ஒரே பார்வையில்

இணைய பக்கங்களில் குறித்த டொமைனின் கீழ் நீங்கள் சென்ற பக்கம் இல்லை என்றால் தோன்ற செய்யப்படும் பக்கங்கள் Error page என அழைக்கப்படும் என்பது அனைவரும் அறிந்ததே. பிளாக்கர்களில் கூட இதை வைப்பது பற்றி பல பதிவுகள் இணைய வெளியில் தமிழில் உலாவுகின்றன. அதனால் அது பற்றி எதுவும் இங்கே தேவை இல்லை. இணைய வடிவமைப்பாளர்களின் சிம்ம சொர்ப்பனமாக விளங்கும் HTML5 மூலம் பல இணைய தளங்கள் தமக்கு என்று பல விதமான கண்கவர் 404- Error pageகளை வடிவமைத்து உள்ளன. நான் இதில் மிகவும் கவர்ச்சி மிக்கதும் இயங்ககூடியதுமானசில error pageகளை அவற்றின் இயங்கு நிலை உடனே இங்கே இணைத்து உள்ளேன். ஒவ்வொன்றிலும் உங்கள் மௌஷை கொண்டு செல்லும் போது எதோ மாற்றம் வரும். ஒவ்வொன்றின் கீழும் முடிந்தளவு சிறிய விளக்கத்தை கொடுத்து இருக்கிறேன். உங்களுக்கும் இது பற்றி வேறு தளங்கள் தெரிந்தால் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மெக்சிக்கோ பிரமிட்கள் இப்போது Google Street Viewவில்

பிரமிட்டு என்பது பட்டைக்கூம்பு வடிவில் அமைந்த ஒரு கட்டிட அமைப்பு ஆகும். இதன் அடி பெரும்பாலும் சதுரமாக அமைந்திருக்கும். எனினும், இது முக்கோணம், வேறுவகைப் பல்கோணங்கள் ஆகிய வடிவங்களிலும் அமையலாம். இக் கட்டிடங்களின் நிறையில் பெரும் பகுதி அடிப்பகுதியில் அமைந்திருப்பதால், இவற்றின் புவியீர்ப்பு மையம் நிலத்துக்கு அண்மையில் அமைந்திருக்கும் இதனால், சில பழங்கால நாகரிக மக்கள் உறுதியான நினைவுச் சின்னங்களை அமைப்பதற்கு இந்த வடிவத்தைத் தேர்ந்தெடுத்தனர்.
எல் காஸ்ட்டிலோ பிரமிட் ( El Castillo) என்பது மெக்சிக்கோவின் மாநிலமான யுகட்டானிலுள்ள தொல்பொருளியற் களப்பகுதியான சிச்சென் இட்சாவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள மெசோஅமெரிக்க படிக்கட்டுப் பிரமிட் ஆகும். எல் காஸ்ட்டிலோ என்பது "கோட்டை" என்னும் பொருள் தரும் ஸ்பானிய மொழிச் சொல்லாகும்.
9 ஆம் நூற்றாண்டளவில், மாயன் நாகரீக மக்களால் கட்டப்பட்ட இது குகுல்கன் (குவெட்சால்கோட்டில் (Quetzalcoatl) என்பதற்கான மாயன் மொழிச் சொல்) கடவுளுக்கான கோயிலாகப் பயன்பட்டது.

இங்கே Olympics Google Doodles Games -தவறவிட்டவர்கள் விளையாடி மகிழுங்கள்

ஒலிம்பிக் நடைபெற்ற காலம் ஒரு இக்கட்டான காலம். பல பரீட்சைகள் நடைபெற்றன. பலரால் கணணி பக்கம் கூட வர முடியவில்லை. இதனால் ஒலிம்பிக் பிவேர் பலரை ஆட்டிபடைக்கவில்லை. நான் கூட அப்படி தான். ஒரு சில காரணங்களால் ஒலிம்பிக் நிகழ்வுகளை தவறவிட்டேன் ஆனால் அனைத்தும் யு ட்டுப் இல் உள்ளது. ஒவ்வொன்றாக பார்த்து முடிக்கலாம். ஆனால் கூகிள் கூட தன் பங்கிற்கு பல HTML5 வித்தைகளை தனது முகப்பில் காட்டியது. முக்கியமாக 4 விளையாட்டுக்கள் மிகவும் சுவாரசியமானவை. அதை தவறவிட்டவர்கள் இங்கே அவற்றை விளையாடி மகிழலாம். இங்கே எப்படி விளையாடுவது என்று கூட ஓரளவு எழுதி இருக்கிறேன்.அது உங்களுக்கு தேவை இல்லை. ஒரே கிளிக் இல் அவர்களே சொல்லி தருகிறார்கள்.

செவ்வாயில் எப்படி கியுறியொசிட்டி தரையிறங்கியது? - இயங்கு நிலை விவரணம்

அண்மையில் செவ்வாய் கிரகத்தில்  curiosity விண்கலம் தரையிறங்கியது அனைவராலும் பரபரப்பாக பேசப்பட்டது. இதையொட்டி நாசா அதிகளவு விவரனங்களை வெளியிட்டது. அதில் முக்கியமாக இது எவ்வாறு தரையிறங்கியது என்பதை HTML5 மூலம் அழகாக வெளிப்படுத்தி உள்ளது. இது நடைபெற்று நீண்ட காலம் ஆகிவிட்டது. எனினும் பிரபல தமிழ்  பதிபவர்கள் இது பற்றி எதுவுமே பதிவிடாத காரணத்தாலே  சிறு இடைவெளியின் பின்னர் இதை வெளியிடுகிறேன்.
நீங்களும் இதை இயக்கி பாருங்கள். நவீன தொழிநுட்ப உலகின் மிகப்பெரும் சாதனை பயணத்தில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்.

Google Analytics பயன்படுத்தும் அனைவருக்குமான வழிகாட்டி இலவச கைநூல்

googleanalytics-240
இந்த தளத்தில் பல பாகங்களாக வெளி வந்த Google Analytics தொடரினை வாசித்த வாசகர்களுடைய கருத்துகளை வாசித்த போது சிலரால் அது தொடர்பாக புரிந்து கொள்ள முடியவில்லை. உண்மையில் தொடரை எழுத ஆரம்பிக்கும் போது அடிப்படையில் இருந்தே எழுத ஆரம்பிக்க வேண்டும். ஆனால் நான் உயர்மட்டத்தில் இருந்து ஆரம்பித்தது தவறுதான். என்னை போல அனைவரையும் எண்ணியது என்னுடைய மிகப்பெரும் பிழை. அதனாலேயே SEO பற்றிய தொடரை ஆற அமர இருந்து ஒவ்வொரு வரியாக செதுக்கி கொண்டு இருக்கிறேன். பலர் ஆவலாக இருக்கும் அந்த தொடர் விரைவில் பிரசுரமாக ஆரம்பிக்கும். இப்போது விடயத்திற்கு வருவோம்.

kennedy விண்வெளிநிலையத்தை சுற்றி பார்போம்

அண்மையில் கூகிள் கேனடி விண்வெளி நிலையத்தின் 6000 புகைப்படங்களை உள்ளடக்கிய பரந்து அகன்ற பக்கபடங்களை கொண்ட கணணி சுற்றுலாவை கூகிள் ஸ்ட்ரீட் view ஊடாக அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் முக்கியமாக Saturn V ரொக்கெட் படங்களையும் உள்ளடக்கி உள்ளது. இதை விட ரொக்கெட் தயாரிப்பு இடங்களையும் படம் பிடித்து போட்டு உள்ளது. உயர் பாதுகாப்பு மிக்க இந்த இடங்களை சாதாரண மக்கள் பார்வைக்கு கிடைக்க வழி வகுத்து உள்ளது சிறப்புக்கு உரியது. நீங்களும் இங்கே சென்று முழு சுற்றுலாவையும் பாருங்கள்! இங்கே சில அதி முக்கியமான படங்களை இங்கே காணுங்கள்.

Google Map உதவியுடன் வானில் பறந்துகொண்டிருக்கும் விமானங்களை எப்படி கண்காணிப்பது?

aircraft-view.jpg
Google மக்களுக்கு புதுமைகளை அள்ளி தந்தவண்ணம் உள்ளது. அதில் புதிய முயற்சியாக இப்போது வானில் பறந்தபடி உள்ள விமானங்களை உங்கள் கணணி உலாவி மூலம் கண்காணிக்கும் வசதியை வழங்கி உள்ளது. நீங்கள் குறித்த விமான இலக்கத்தை வழங்கினால் அந்த விமானம் இருக்கும்   இடத்தை காட்டுகிறது. உங்கள் நாட்டை காட்டினால் வரும் போகும் விமானங்களை காட்டுகிறது. விமானத்தை கிளிக் செய்தால் அதன் வேகம், தரை இறங்க எடுக்கும் நேரம், வானிலை தகவல்களை தருகிறது.

Adsense பாதிக்கப்படுவதை தடுக்க பார்வையாளர்களிடம் உள்ள Adblocker இயக்கத்தை எப்படி நிறுத்துவது?

வணக்கம் நண்பர்களே, நீங்க காலத்தின் பின்னர் உங்களை சந்திக்கிறேன். ஆர்வக்கோளாரில் ஒரு வலைப்பூவை தொடக்கி, எனக்கு என்று ஒரு என்னை பின் தொடரும் கூட்டமாக உருவாகிய உங்கள் அனைவருக்கும் என்னால் கடந்த ஒரு மாதங்களாக ஒரு பதிவை கூட இட முடியவில்லையே என்பது என் நீண்ட கவலை. இந்த பதிவும் அனைவருக்கும் பயன்படும் என்று எதிர்பார்க்க வில்லை நான்.