JavaScript Disable செய்து விட்டு வரும் பதிவு திருடர்களுக்கு நிரந்தர தீர்வு

வழமையாக சராசரி பதிபவர்கள் தமது உள்ளடக்கங்களை பாதுகாக்க right click  தடை செய்வார்கள். அல்லது selecting option தடை செய்வார்கள். ஆனால் ஜாவா ஸ்கிரிப்ட் இயங்கா நிலையில் இவை இரண்டுமே பயனற்றது.  ஒரு சில பதிபவர்கள் தமது ஆக்கங்களை புகைப்படங்களாக water mark உடன் வெளியிடுகிறார்கள். அவை மீண்டும் தட்டச்சு செய்யப்படும் சோம்பலினால் பதிவு திருடர்களிடம் இருந்து  ஓரளவு பாதுகாக்கப்டுகின்றன. 
பதிபவர்களின் நீண்ட ஏக்கம் தமது பதிவுகளை பிற பதிபவர்கள் பிரதி எடுப்பது அல்ல. தமது பெயரை குறிப்பிடாமல் பிரதி பிரதி எடுத்து பிரபல பத்திரிகைகள் பிரசுரித்து விடுகின்றனவாம். குறிப்பாக சினிமா விமர்சனங்கள்.

லண்டன் ஒலிம்பிக் மைதானங்களை உள்ளே சென்று சுற்றி பாருங்கள்

இன்னும் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க சில மணி நேரங்களே உள்ளது. இந்த ஒலிம்பிக் நடைபெற போகும் ஒலிம்பிக் லண்டன் மைதானங்களை ஒருதடவை பாருங்கள். எத்தனை அழகு>>>> சில தினங்களுக்கு முன்பு கூகிளால் எடுக்கப்பட்ட இந்த ஸ்ட்ரீட் view லண்டன் மைதானங்களின் ஒட்டு மொத்த அழகையும் பிரதி பலிக்கிறது. நாமும் ஒரு தடவை சென்று பார்க்க மாட்டோமா என்ற ஆவலை தூண்டு கின்றன. அத்துடன் நீங்கள் முப்பரிமாண கண்ணாடிகளை வைத்து இருப்பின் right click செய்து 3Dநிலையிலும் இவற்றை கண்டு களிக்கலாம். அது தவிர நேரடியாக போட்டிகளை கண்டு கழிக்க எமது தளத்திலும் youtube ஊடாடு நிலை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. உலகம் முழுவது கோடிக்கணக்கான மக்கள் இதை காண முயற்சிக்கலாம் என கூகிள் எதிர் பார்க்கிறது. இதனால் live streaming severs சிக்கலில் சிக்கலாம் என எதிர்வு கூறப்பட்டு உள்ளது.

இலவசமான முன்னணி 10 Video Editing Software

இன்று நாம் அனைவரும் எதோ ஒரு காரணத்திற்காக வீடியோகளை செதுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். youtubeஇல் தரவேற்றுவதாயினும் சரி அல்லது DVDகளில் பகிர்வதாயினும் சரி, எதுவாயினும் அழகு படுத்த வேண்டும். ஆனால் பலரால் பெறுமதியான மென்பொருட்களை வாங்க பொருளாதாரம் இடம் கொடுப்பதில்லை. திருட்டு தனமாக பயன்படுத்தவும் மனம் இல்லை. இதற்கு தான் இந்த திறந்த மூலக்கூற்று மென்பொருட்கள் கை கொடுக்கின்றன. இணையத்தில் பல இவ்வாறான மென்பொருட்கள் இலவசமாக கிடைப்பினும் அனைத்து பயன்படுத்துவத்தில் வேறு பட்ட நுட்பத்தை கொண்டவை. நான் இங்கே சிறந்த 10 மென்பொருட்களை பட்டியல் படுத்தி உள்ளேன். நீங்களே பாருங்கள். விரும்பிய ஒன்றை தரவிறக்குங்கள்.

நீரில்லா உலகில்.. எதிர்கால உலகம் பற்றி ஒரு விவரணம்

Other Water iconநீர் இல்லாமல் ஒருவராலும் வாழ முடியாது. இந்த நீர் இன்று பெரும் சவால்கள் நிறைந்த ஒரு விடயமாக மாற்றி விட்டது. அனைவரும் அறிந்ததே. இதனால் ஏற்பட போகும் பாதிப்புக்கள் என்ன? இதை சுவாரசியமாக இந்த விவரணம் சொல்கிறது. இந்த விவரணத்தில் உள்ள ஒவ்வொரு படியும் ஒவ்வொரு வயது மட்டத்தினர் எவ்வாறு தமது நீர்தேவையை அடைவதில் சிக்கலை எதிர்கொள்வார் என்பதை படம் பிடித்து காட்டுகிறது. நீங்களும் ஒரு முறை தான் போய் பாருங்களேன்.

குளிர் நிறைந்த அந்தாடிக்காவிற்கு குளுகுளு பயணம்- Virtual Tour

அன்டார்க்டிக்கா (Antarctica) பூமியின் தென் முனையைச் சூழ்ந்திருக்கும் ஒரு கண்டமாகும். பூமியிலேயே மிகவும் குளிர்ந்த பகுதி இதுவாகும். மேலும் கண்டம் முழுவதும் ஏறக்குறைய பனிக்கட்டியினால் மூடப்பட்டுள்ளது. புவியில் உள்ள நன்னீரில் கிட்டத்தட்ட 70 வீதமானது இங்கேயே உள்ளது. புவி வெப்பமாதலினால் இங்குள்ள பனி உருகிவருகின்றது. இதன் மூலம் கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இங்கு சிறிதளவான முள்ளந்தண்டுளி வகைகளே உள்ளன. உதாரணமாகப் பென்குயின்கள் மற்றும் நீலத்திமிங்கிலங்களைக் குறிப்பிடலாம்.

Adblockers மூலம் Adsense வருமானம் பாதிக்கப்படுவதை உங்கள் வலைப்பூவில் தடை செய்வது எப்படி?

stop ad blockingஅட்சென்ஸ் மூலம் சராசரியாக பிரபல தமிழ் தளங்கள் தினமும் 20$ வரை உழைக்கிறார்கள்.  இப்போது தான் மிக இலகுவாக தமிழ் தளங்களுக்கு அட்சென்ஸ் கிடைக்கிறதே. எனவே நீங்கள் கூட இத் தொகையை தாண்டி உழைக்கும் ஒரு பதிபவராக இருக்கலாம். அண்மை காலங்களில் உங்கள் வருவாய் குறைகிறதா? ஆம் எனில் நிச்சயம் அட் ப்லோக்கர் - Ad-blocker எனப்படும் மென்பொருள் அல்லது add-on அல்லது Extension எனப்படும் அட்சென்ஸ் அல்லது அது போன்ற விளம்பரங்களை உங்கள் உலாவியில் தடை செய்யும்   ஒரு செயலியின் விளைவாக தான் இருக்கும். இச்செயலியின் பயன்பாடு அண்மை காலங்களில் தமிழ் வாசகர்கள் இடையே அதிகரித்து உள்ளது.

Rugby விளையாட்டில் ஒளிந்திருக்கும் பயங்கர மர்மங்கள்

ரக்பி கால்பந்து (Rugby football) என்பது, ஐக்கிய இராச்சியத்தின் பல பகுதிகளில் உருவாகி வளர்ந்த கால்பந்து விளையாட்டில் இருந்து தோன்றிப் பல்வேறு கால கட்டங்களிலும் விளையாடப்பட்டு வந்த விளையாட்டுக்களில் ஒன்றைக் குறிக்கும். இன்று இது வெறுமனே "ரக்பி" என அழைக்கப்படுவதுண்டு.பண்டைக்கால கிரேக்கத்தில் ரக்பி கால்பந்தை ஒத்த எப்பிசுக்குரோசு என்னும் ஒரு விளையாட்டு விளையாடப்பட்டு வந்தது. வேல்சிலும் மத்திய காலப்பகுதியில் விளையாடப்பட்ட இதுபோன்ற ஒரு விளையாட்டு கினாப்பன் அல்லது கிரியாப்பன் என அழைக்கப்பட்டது.

ஒபாமாவின் மறைக்கப்பட்ட ஆச்சரியமான மறு பக்கம் - ஒரு அலசல்

barak obama iconஅமெரிக்க தற்போதைய அதிபர் பரக் ஒபாமாவின் வாழ்க்கை மிகவும் அழகானது. சுவசுவாரசியமானது. நான் தினமும் காணும் கும்பிடு போடும் அரசியல் வாதிகளிடம் இருந்து ம்மிகவும் வேறுபட்டது. ஒரு வல்லரசின் தலைவர் சாதாரணமானவர் அல்ல. மிகுந்த நிர்வாக திறமை, ஓர்ஒருங்கிணைக்கும் ஆற்றல், கட்டுப்படுத்தும் திறன், பதிலளிக்கும் கடப்பாடு இப்படி நிறையவே உள்ளன. இவர் எவ்வாறு தனது வாழ்வில் எப்படி படி படியாக முன்னேறினார் என்பதை இந்த விவரணம் அழகாக படம் பிடித்து காட்டுகிறது. இவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விடையங்கள் நிறையவே உண்டு.

YouTube அறிமுகப்படுத்தும் புதிய பயனுள்ள வசதி Face-Blurring Tool

புதுமைகள் என்றால் அது கணணிக்கல்லூரி, அடுத்தது கூகிள். அதிலும் பல படங்களை பார்க்க அவர்கள் அறிமுகப்படுத்திய சேவை youtube அல்ல. கூகிள் வீடியோ தான் அது. தொழிநுட்ப பிரச்சனையாலும் போட்டி சூழலாலும் தனக்கு போட்டியாக இருந்த youtube சேவையை அதை ஆரம்பித்த தம்பதியினரிடம் பணம் கொடுத்து வாங்கி இன்றுவரை அபிவிருத்தி செய்து வருகிறது.  அந்த வகையில்  நேற்று அவர்கள் அறிமுக படுத்திய அட்டகாசமான வசதி தான் இந்த  Face-Blurring Tool.  Face-Blurring Tool என்றால் என்ன?

கணணிக்கல்லூரி பற்றிய திடுக்கிடும் ஆய்வு.. .

இத்தளம் அண்மைக்காலங்களில் சந்திக்கும் சில இடர்பாடுகள், மற்றும் எதிர்காலத்தில் இத்தளத்தை பயனுறுதி ஆக்குவதை இலக்காக கொண்டு சில கேள்விகள் இடம்பெறுகின்றன. தயவுசெய்து மனப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கவும். இங்கு நீங்கள் வழங்கும் தகவல்கள் மிக இரகசியமாகவும் அந்தரங்கமாகவும்  பேணப்படும். இப்படிவம் பூரனப்படுத்தப்படும் போது  தானாக சமர்ப்பிக்கும் பகுதி தோன்றும்!

இவ்வாண்டு மடிக்கணணி வாங்க உள்ளவர்களுக்கான கையேடு

இன்று தொழிநுட்ப உலகில் அதிகம் பேசப்படுவது வெளியான Intel IVT processor, வெளிவர உள்ள விண்டோஸ் 8,  மற்றும் iphone5. இப்போது போட்டியான சந்தை சூழலால் இலத்திரனியல் உபகரணங்களின் விலை வீழ்ச்சி அடைகிறது. ஒரு மேசைகணணி வாங்குவதை விட மடி கணணி சிறந்தது. மின் தடைகளை சமாளிக்க இதுவே சிறந்த தீர்வு. இதை வாங்குவது  தான் சிக்கல். ஒவ்வொரு நிறுவனமும் பல விதமாக விற்பனைக்கு விட்டு இருக்கின்றன. இதில் எது நல்லது? எது எமக்கு  பொருத்தமானது? வாங்கும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள் என்ன? எதை வாங்க கூடாது? இப்படி பல கேள்விகளுக்கு விடை தருகிறது இந்த 17 பக்க E-Book. நிபுணத்துவம் வாய்ந்தவரால் எழுதப்பட்ட இந்த புத்தகம் வெறும் 2MB அளவு உள்ளது. இதன் சிறப்பம்சமே அனைவருக்கும் ஏற்ற படி ஆனால் ஆழமாக ஒவ்வொரு பாகத்தையும் அலசி ஆராய்ந்து இருப்பது தான்.

ஆச்சரியம் மிக்க பயணம்: அண்டத்தில் மிக சிறியதில் இருந்து பெரியது வரை என்ன உள்ளது?

இது அண்டத்தில் என்ன இருக்கிறது? (updated) என்பதன் புதுப்பிக்கப்பட்ட பகுதியே ஆகும். இதை இதுவரை பார்க்காதவர்கள் சென்று பார்த்து விட்டு வாருங்கள். சரி விடயத்திற்கு வருவோம். அண்டத்தில் என்ன இருக்கிறது? அதில் நாம் எங்கு இருக்கிறோம்.. பிரபஞ்சத்தின் எல்லைகளை இன்னும் யாரும் முழுமையாக நமக்குக் காட்டவில்லை. ஆனால் இதில் அடங்கியுள்ளவை குறித்து நாம் பல தகவல்களைக் கொண்டுள்ளோம். பல தகவல்கள் நாம் அறிந்து ஒத்துக் கொள்ளும் வகையில் தரப்பட்டுள்ளன. சில இன்னும் அனுமானத்திலேயே உள்ளன.

Friend Connect மூலம் இணைத்த வலைப்பூக்களை G-Readerஇல் இருந்து நீக்குதல்

social balloon friends iconஅனைவரும் எதோ விதத்தில் கூகிள் உடன் இணைக்கப்பட்டு இருக்கிறோம். நமக்கு விரும்பிய வலைபூக்களில் பதிவுகள் இடப்படும் போது நமக்கு உடனடியாக கிடைக்க வழி செய்வது கூகிள் ரீடர். ஆனால் இதை நாம் friend connect ன் ஊடாக பெறுகிறோம். ஒரு வலைப்பக்கத்தை எதோ ஒரு வழியில் அடைந்த எம்மை அதில் உள்ள பதிவுகளில் ஒன்று எம்மை கவரும் போது இவ்வலைப்பூ நமக்கு பயனுள்ளது என்று முடிவெடுத்து சட்டென்று அந்த தளத்தில் இணைகிறோம். நாளடைவில் அத்தளத்தில் இடப்படும் பதிவுகளால் நமது ரீடிங் லிஸ்ட் நிறைய ஆரம்பிக்கும். அப்போது தான் நாம் இதை நீக்குவது குறித்து ஆராய்வோம்.

Bing & Yahoo Seach பகுதியில் வலைப்பூவை இணைத்தல்- Indexing - BING Web Master- Updated



Bing Webmaster Tools என்பது மிக பிரபலமான SEO கருவிகளில் ஒன்றாகும். இதன் மூலமே அனைத்து தளங்களையும் தனது மற்றும் யாஹூவின் search பகுதியில் இணைக்கிறது. அது மட்டும் அல்ல தொழிநுட்ப ஆதரவு, malware களிடம் பாதுகாப்பு,  Keyword Research Link Explorer Fetch as Bingbot Markup Validator, SEO Analyzer என பல வகையான சேவைகளை இலவமாக வழங்குகிறது. இது தொடர்பாக விரிவாக பார்ப்போம்.

Google Seach பகுதியில் வலைப்பூவை இணைத்தல்- Google Indexing - Google Web Master

Google Webmaster Tools என்பது மிக பிரபலமான SEO கருவிகளில் ஒன்றாகும். இதன் மூலமே அனைத்து தளங்களையும் தனது search பகுதியில் இணைக்கிறது. அது மட்டும் அல்ல தொழிநுட்ப ஆதரவு, malware களிடம் பாதுகாப்பு என பல வகையான சேவைகளை இலவமாக வழங்குகிறது. இது தொடர்பாக விரிவாக பார்ப்போம்.

YouTube பயன்படுத்துவது எப்படி?

Youtube, அனைவரும் அறிந்த ஒரு பிரபல வீடியோ பகிர்வு தளம். இதன் கொள்ளளவு. ஒவ்வொரு நிமிடமும் 48 மணி நேர வீடியோக்கள் தரவு ஏற்றப்படுகின்றன. இவ்வாறு சிறப்பு மிக்க இந்த யு டுப் சேவையை நாம் எத்தனை பேர் பூரணமாக  பயன் படுத்துகிறோம். இதில் நமக்கு தெரியாத பல வசதிகள் உள்ளன. இவற்றை பயன்படுத்துவது எப்படி? இப்படி பல கேள்விகளுக்கு இச்சிறிய புத்தகம் விளக்கம் அளிக்கிறது. இப் புத்தகத்தின் சாராம்சம் இதோ:
  • The history of YouTube, and how active it is
  •  How to find videos relevant to your interests 

பதிவின் எப்பகுதி அதிகளவில் எவ்வளவு தூரம் வாசிக்கப்பட்டது என்பதை கண்காணித்தல் - Google Analytic 5

Do people actually read content?Google Analytic தொடர் மாபெரும் உங்கள் ஆர்வத்தால் 5ம் பாகத்தை எட்டி உள்ளது. இன்று இப்பதிவின் ஊடாக நாம் என்ன பார்க்க போகிறோம்? இதன் நன்மை என்ன? Advanced Content Tracking என அழைக்கப்படும் இது, பொதுவாக கட்டுரை பதிவுகள், கவிதைகள் எழுதுபவர்களுக்கு அவசியமானது. இதன் மூலம் அவர்கள் உடைய ஆக்கங்கள் யாரெல்லாம் வாசித்தார்கள், எதை விரும்பினார்கள், இப்படியான தகவல்களை பெற்று தம்மை மதிப்பிட பயன்படுத்திக்கொள்ளாம். அவர்களுக்கு மட்டும் அல்ல ஒவ்வொரு பதிபவருக்குமே இது அவசியம். உதாரணத்திற்கு அவர்களை சொன்னேன். இலவசமாக கிடைக்கும் இந்த கூகுளின் சேவையை பயன்படுத்தும் முறை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து வாசியுங்கள்.

ஜாலியா இருக்க கொஞ்ச HTML5 வித்தைகள் Part 1

HTML5 அறிமுகப்படுத்தப்பட்டு சில காலமே, இன்னும் பரிசோதனை நிலையில் உள்ள இதில் பல ஆச்சரியாமான விடயங்கள் சத்தமின்றி அரங்கேறி வருகின்றன. நான் உங்களுடன் சில ஆச்சரிய பட வைக்கும் HTML வித்தைகளை பகிர்கிறேன். இது நாங்கள் ஏற்கனவே பார்த்து விட்டோம் என்று எண்ணாதீர்கள். நீங்கள் கண்டது எல்லாம் பிளாஷ் animation. தரவிறங்குவதில் சிக்கல், plugin தேவை இப்படி பல சிக்கல்கள். இப்போது எதுவும் இல்லாமல் இதை அனுபவியுங்கள். அறிமுகப்படுத்தப்பட்டு சில காலமே ஆன இவற்றை தமிழில் முதன் முறையாக அறிமுகப்படுத்துவதில் கணணிக்கல்லூரி பெருமையடைகிறது.

இறந்து போன பழைய கணனிக்கு Ubuntu மூலம் உயிர் கொடுப்போம்

Bring Old PC To Life With Ubuntuஉங்கள் அனைவரிடமும் பழைய கணணிகள் இருக்கலாம்? பழசா? நூற்றாண்டு கால பழமையா? இல்லை. கடந்த 3 வருடங்களுக்கு முதல் வாங்கி இப்போது வந்துள்ள மென்பொருட்களுக்கு ஈடு கொடுக்காது உள்ள கணணிகள். இதை பழைய சாமனாக எறிவதா? இல்லை அருங்காட்சியகமாக உங்கள் வீட்டில் பாதுகாப்பதா? இல்லை ஏதாவது தொண்டு நிறுவங்கள் மூலம் பின் தங்கிய பாடசாலைகள் அல்லது இவ்வாறான பரிதாபகரமான நிறுவங்களுக்கு கொடுப்பதா? எது எவ்வாறாயினும், முதலில் உங்கள் பழைய கணணியை உயிர்ப்பிக்க வேண்டும். இதுக்கு என்ன செய்யலாம். Open Source OS ஆகிய உபுண்டு உடன் கைகோர்ப்போம். இங்கே உள்ள கை நூல் உங்களுக்கு உங்கள் பழைய கணணியை எவ்வாறு உயிர் கொடுத்து இயங்க வைப்பது என்பதை தெளிவாக சொல்லி தருகிறது.

பதிபவர்களுக்கு அவசியமான HTML Compressor

அண்மை காலமாக பல பதிபவர்களது பிரச்சனை, பல ஜாவா ஸ்கிரிப்ட் இயங்காமை, தளம் பூரணமாக தரவிறங்காமை, படங்கள் வெட்டுப்படுதல், பக்க அமைப்பு சிதைவடைதல் இப்படி பலவற்றை அடுக்கிகொண்டே போகலாம். இதற்க்கு பிரதான காரணம், தொழிநுட்ப பதிபவர்கள், தமது தளத்திற்கு வருகையை கூட்ட ஆங்கில தளங்களில் வெளியாகும் widgetகளை மொழி பெயர்த்து அப்படியே "அப்படி இப்படி" என்று ஆரவாரத்துடன் பதிவிடுவார்கள், 

சரிந்த உருவங்களை நேராக்குதல்- Photoshop

உங்களிடம் Adobe Photoshop CS5 அல்லது அதற்கு மேலே இருந்தால் தொடர்ந்து வாசியுங்கள். சரிந்த உருவங்களை நேராக்குவது எப்படி என்று பார்ப்போம். தமிழில் போடோஷோப்  பயிற்சிகளை வழங்க பல இணைய தளங்கள் இருந்தாலும் அவை இன்னரும் கூட அடிப்படையை மட்டுமே சொல்கின்றன. அடிப்படையை மட்டும் கற்று என்ன பயன். எனவே இங்கு சற்று வித்தியாசமான ஒரு பாடத்தை தருகிறேன். இந்த படத்தை பாருங்கள். சரிந்த பெண்ணின் கழுத்து நேராக்கி விட்டது. எந்த குறையும் படத்தில் இல்லை. இதை எப்படி செய்வது. மிக மிக இலகுவாக இங்கே விவரித்து உள்ளேன். பாருங்கள்.