பூமி நேரம் 2012 -கணணி விளையாட்டு ஊடான பிரசாரம்

இன்று உலகெங்கும் பூமி நேரம் ஒரு மணித்தியாலம் அனுஷ்டிக்கப்பட்டது. அது தொடர்பான விளக்கத்தை பெறும் வகையில் எமது இவ் கணணி விளையாட்டு படைப்பு இதோ... உலக சூழல் பாதுகாப்பில் நாமும் பங்கெடுப்போம். நீங்களும் விளையாடி உங்கள் நண்பர்களையும் சூழல் பாதுகாப்பில் ஈடுபட செய்யுங்கள்.

பூமி நேரம் 2012- அறிந்துகொள்ளுங்கள்

இன்று உலகெங்கும் பூமி நேரம் ஒரு மணித்தியாலம் அனுஷ்டிக்கப்பட்டது. அது தொடர்பான விளக்கத்தை பெறும் வகையில் எமது படைப்பு இதோ... உலக சூழல் பாதுகாப்பில் நாமும் பங்கெடுப்போம்.

மூளையை ஆளும் உணர்வுகளை நாமே உருவாக்குவோம்

உங்கள் மூளையை கட்டுப்படுத்தி போதை தரும் உணர்வுகளை அல்லது விசித்திரமான அல்லது வலியை போக்கும் உணர்வுகளை தட்டி எழுப்பும் முறை பற்றி பார்ப்போம். இவை விஞ்ஞான ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்டது.மனம் சம்பந்தமான ஆராய்ச்சிகளின் முடிவுகள் இங்கே.

ஒரு இயங்குதளத்தில் வேறு ஒரு இயங்குதளத்தை ஒரேசமயம் பயன்படுத்துவது எப்படி?


இன்று தொழிநுட்ப உலகில் அனைவராலும் பேசப்படும் விடயம் Windows 8. இதன் சிறப்புக்களை வாசிக்கும் போது பலர் பயன்படுத்த ஆசைப்பட்டு இருப்பீர்கள். ஏன், சிலர் தரவிறக்கி பாவித்துக்கொண்டு இருப்பீர்கள். ஏன்டா இந்த Beta உடன் வம்பு என்று பலர் ஒதுங்கி இருப்பீர்கள். அனைவரும் விண்டோஸ் 8 பீட்டா பதிப்பை பயன்படுத்த ஒரு முறையை இங்கு குறிப்பிட விளைகிறேன். இப்பதிவின் நோக்கம், விண்டோஸ் 8 நிறுவும் முறையல்ல. ஒரு கணனியில் இன்னொரு இயங்கு தளத்தை உட்புறமாக நிறுவி இயக்குதல் பற்றிய செயன்முறை விளக்கம் ஆகும்.

இலவசமாக புகைப்படங்களை ஆச்சரியமானதாக மாற்றுங்கள்

நாம் இங்கே இருவசதிகளை இணையத்தில் இணைத்து உள்ளோம்.

  1. உங்கள் புகைப்படங்களை பேய்களின் தோற்றத்தில் மாற்றுதல்.
  2. உங்களுக்கும் உங்கள் துணைக்கும் பிறக்க போகும் குழந்தையின் முகத்தை முற்கூட்டியே கணனியில் காணுதல்.

உங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தை முகத்தை இங்கே பாருங்கள்

இப்பதிவு தற்போது மேலும் மேருகூடப்பட்டு இன்னும் பல வசதிகளுடன்  எமது தளத்திலே இணைக்கப்படுள்ளது. குறித்த பக்கத்தை காண இங்கே செல்லுங்கள்.
இலவசமாக புகைப்படங்களை ஆச்சரியமானதாக மாற்றுங்கள்
சிரமங்களுக்கு வருந்துகிறோம் 

உலகில் வெளிவிடப்படும் Carbon Di Oxide அளவு இங்கே!

இன்று உலகம் முழுவது வெப்பமயமாதல் அதிகரிக்கிறது. பச்சை வீட்டு விளைவுகள் ஏற்படுகின்றன. நாம் ஒவ்வொரு வினாடியும் சுவாசிக்கிறோம். உலகில் உள்ள ஓட்டு மொத்த உயிரிகளும் சுவாசிக்கும் போது வெளிவிடப்படும் மொத்த CO2 அளவை இங்கே நிகழ் நேரத்தில் காணுங்கள்..

அடுத்ததில் play Buttion அழுத்தத்தில் வளிமண்டலத்தில் CO2 சேர்ந்த விதத்தை அவதானியுங்கள்.

அண்டத்தில் என்ன இருக்கிறது? (updated)

அண்டத்தில் என்ன இருக்கிறது? அதில் நாம் எங்கு இருக்கிறோம்.. பிரபஞ்சத்தின் எல்லைகளை இன்னும் யாரும் முழுமையாக நமக்குக் காட்டவில்லை. ஆனால் இதில் அடங்கியுள்ளவை குறித்து நாம் பல தகவல்களைக் கொண்டுள்ளோம். பல தகவல்கள் நாம் அறிந்து ஒத்துக் கொள்ளும் வகையில் தரப்பட்டுள்ளன. சில இன்னும் அனுமானத்திலேயே உள்ளன. நாள் தோறும் ஏதேனும் ஒரு புதிய தகவலை, இந்தப் பிரபஞ்சம் குறித்து நமக்கு விஞ்ஞானிகள் மற்றும் அறிவியல் ஆய்வாளர்கள் தந்துகொண்டுள்ளனர். இவை அனைத்தையும் ஓரிடத்தில் நாம் தெரிந்து கொள்ள முடியுமா? சற்று சிரமம்தான். உங்களுக்காக நாம் இந்த சந்தர்ப்பத்தை  தருகிறோம்.

கை முறிவுக்கு சிகிச்சை அளிப்பது எப்படி? கணணியில் பயிற்சி

உடல் பாகமான கையில் முறிவு ஏற்பட்டால் சத்திர சிகிச்சை முறையில் தீர்வு அளிக்கும் முறை இதோ. இது சிகிச்சையாக இல்லாமல் விளையாட்டாக இருப்பது வைத்திய துறையை அருவருப்புடன் நோக்குவோருக்கு இது சிறந்த ஒரு பயிற்சி வழியாக இருக்கும்

உணவு கால்வாயில் கணனியில் ஒரு பயணம்..

கணணி கல்லூரியின் மற்றுமொரு படைப்பு. உங்கள் உணவு கால்வாயை பற்றி அறிய ஒரு Online Simulator..
அத்துடன் மற்றும் ஒரு படைப்பு... இரு படைப்புக்கள் முற்றிலும் இலவசமாக எமது பார்வையாளர்களுக்கு ......

விண்வெளியில் Angry Birds விளையாடுவோம்

நேற்றைய தினம் (2012.03.22)  இணைய தளங்கள் மட்டும் அல்ல, தொழிநுட் வல்லுனர்களும் கூட பரபரப்பாக காணப்பட்ட நாள். அண்ணளவாக இப்பதிவு எழுதப்படும் வரை 2 மில்லியன் இணைய விற்பனையை தாண்டிய Angry Bird Space  நேற்றைய தினம் வெளிவந்ததே காரணம். அமெரிக்க தொழிநுட்பவியலாலர்களால் உடைக்க /திருட முடியாத வண்ணம் வெளியிடப்பட்ட இவ் விளையாட்டு வெளியிடப்பட்டு

User Nameக்கும் Passwordக்கும் விடை அளிப்போம்!


இன்று அனைவராலும் பேசப்படும் வார்த்தை "Say Goodbye to User Name and Password Logins, மற்றும் say Hello to ‘OneID’ நாமும் இதை பற்றி பார்ப்போம். password  மற்றும் பாவனையாளார் பெயர் இல்லாமல் தளங்களில் உங்களை அடையாளப்படுத்தும் தொழிநுட்பம் Microsoft BizSpark. மூலம் சாத்தியமாக்கப்படுகிறது.

இலவச Online PhotoShop தொகுப்பி


நாளுக்கு நாள் புதிய விடயங்களை அறிமுகப்படுத்தும் கணணி கல்லூரியின் புதிய படைப்பு இலவச புகைப்பட இணைய வடிவமைப்பி. இங்கு உங்கள் புகைப்படங்களை மேல் ஏற்றி விரும்பிய வகையில் வடிவமைத்துக் கொள்ளுங்கள்,  ஒன்றல்ல இரண்டல்ல. மூன்று!அடுத்தடுத்து பல Styles.. பல Editors  ஒரே இடத்தில்.  Photoshop தர வடிவமைப்பிகளை நாம் வழங்குகின்றோம்... இப்போதே ஆரம்பியுங்கள்... 

தமிழ் ஆன்லைன் பரீட்சையை எழுதுங்கள்

தமிழ் இணைய வரலாற்றில் முதன் முறையாக கணணிக்கல்லூரி வழங்கும் புத்தம் புது அறிமுகம், தொடர் அறா நிலையில் தமிழ் மொழி மூலம் பரீட்சை எழுதுதல். பல்தேர்வு வினாக்களை கொண்டுள்ள இப்பரீட்சை முற்றிலும் இலவசமானது. மாணவர்கள் மட்டும் அன்றி கற்றல் ஆர்வம் உள்ள அனைவருக்கும் பயன்படும் என்று எதிர் பார்க்கிறோம். நீங்கள் விடை அளித்தவுடன் புள்ளிகள் வெளி இடப்படும், அத்துடன் சரியான பதில்களும் காட்சி படுத்தப்படும்.

இரத்த பரிசோதனை- மெய்நிகர் விளையாட்டு

கணணிக் கல்லூரி ஏற்கனவே Angry Birds என்ற கணணி விளையாட்டையும்,மெய் நிகர் புகைப்பட பாட நெறி என பல புதுப்புது அம்சங்களை தமிழில் வெளியிட்டு வந்து உள்ளது.நாம் தொடர்ந்து இன்னும் பல பிரயோசனமான பாடநெறிகளை இவ் வகையின் ஊடாக வழங்க உள்ளோம்.
அந்த வகையில் மனித இரத்தத்தை பரிசோதித்து குருதி வகையை அடையாளம் காணும் பயிற்சியை வெறும் பயிற்சியாக அல்லாமல் விளையாட்டாக உங்கள் முன் ஒப்படைக்கிறது.  இது உலக பிரசித்தி பெற்ற ஒரு பயிற்சி விளையாட்டு ஆகும்.நீங்களும் விளையாடி உங்கள் அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்.

இணைய பக்கம் ஆரம்பியுங்கள் - 5 (நிகழ்நேர பராமரிப்பு + கண்காணிப்பு)

உங்கள் இணைய பக்கங்களை நிகழ் நேரத்தில் பார்வையாளர்களை கண்காணிப்பது, தளத்தில் ஏற்படும் பிழைகளை சரி செய்வது தளத்தை பிரபல்யபடுத்துவது தொடர்பாக பார்ப்போம். இவற்றை செய்வதற்கு மென்பொருட்கள் மட்டும் அல்ல பல இலவச இணைய தள சேவைகளும் உள்ளன.இவை உங்கள் தளத்தை தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் ஈடுபடும்.

பாதுகாப்பான விரைவான இணைய பாவனைக்கு OPEN DNS பயன்படுத்துங்கள்.


நாம் எங்கு வசித்தாலும் வீட்டு கணினியின் இணையத்தையும் இணையதளங்களையும் வெகு எளிதாக மேலாண்மை செய்யலாம் . முக்கியமாக நமது குழந்தைகள் இதர தளத்திற்கு செல்லவிடாமல் தடுக்கலாம். அப்படியே குழந்தைகள் தடுக்கப்பட்ட தளங்களைப் பார்த்தாலும் அது உங்களுக்கு மடல் அனுப்பிவிடும்.அது மட்டும் அல்ல, இவை விரைவான இணைய பாவனைக்கும் உதவுகின்றன.
அனுமதி பெற்ற தகவல்களை மட்டும் பார்க்கும் நுட்பத்துடன் கவர்ச்சி விளம்பரங்கள், மால்வேர், பிஷ்ஷிங், கணினி தாக்குதல்கள், மற்றும் பாட்நெட் ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாப்பை உங்கள் கணினிக்கு அளிக்கிறது. இவ் இலவச சேவை பற்றி விரிவாக பார்ப்போம்.

தொலைபேசியில் தமிழில் உடனடி செய்திகள் இலவசமாக பெறுதல்

'ஒரு சம்பவம் அல்லது நிகழ்ச்சி பற்றிய தொகுப்பை அதை நேரில் அனுபவிக்காதவர்களை கருத்திற் கொண்டு அவர்களுக்கு அறியப்படுத்துவது ' என்பது பெரும் பான்மையாக செய்தி பற்றி வரை விலக்கணப்படுத்துகின்றது. இச்செய்தியை கையடக்க தொலைபேசியில் பெற பல வழிகள் உள்ளன. சில தொலைதொடர்பு வழங்குனர்கள் மாதம் அல்லது நாள் அடிப்படையில் கட்டணம் அறவிட்டு வழங்குகிறார்கள். அதுவும் குறித்த செய்தி நிறுவனத்தினை சார்ந்தது. அத்துடன் ஆங்கிலத்தில் அல்லது தமிழை தமிங்கிலத்தில் வழங்குகிறார்கள். உலக செய்திகளை தமிழிலேயே படிப்பது எவ்வாறு?

வீட்டிற்கு வரும் இலவச DVD- Updated

வீட்டிற்கு வரும் இலவச DVD.. நம்பினால் நம்புங்கள்...
நான் பெற்றவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன். பதிவு செய்து இரு வாரங்களில் உலகின் எப்பாகத்திற்கும் வீடு தேடி வரும்... இங்கு நான் குறித்த தளங்களின் முகவரியையும் உள்ளடக்கத்தையும் குறிப்பிடுகிறேன்.. நீங்களும் முயன்று பாருங்கள்.. படங்களை பாருங்கள். இவற்றில் சில புதிதாக இணைத்து உள்ளேன்.

கப்பல் ஓட்டி உலகம் சுற்றுவோம்- Ship Simulator

கப்பலில் பயணம் செய்வது என்பது மிகப்பெரிய அலாதியான விடயம் தான். கப்பல் பயணம் அனைவருக்கும் கிடைக்காது, கப்பல் போக கடல் அல்லது ஆழமான ஆறாவது தேவை, பண செலவு. இப்படி பல இடர்கள் வரும்.இதற்காகவே இவ்விளையாட்டு வடிவமைக்க பட்டுள்ளது. சிறிய பெரிய கப்பல்கள் என அனைத்து வகையான படகுகள் முதல் சொகுசு கப்பல்கள் வரை அனைத்திலும் பயணம் செய்யலாம் .இதில் நீங்களே கப்பல் ஓட்டி செல்வதுதான் சிறப்பான அம்சம்.கப்பலில்  செல்லும் பயணத்தை நிஜத்தை போலவே கணணி விளையாட்டில் புகுத்தி இருக்கும் முயற்சி பற்றி இங்கு பார்க்க போகிறோம்.